Home
News

ஒரே Jio ரீசார்ஜ்.. 4 சிம் கார்டுகளுக்கு வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. போஸ்ட்பெய்ட் கஸ்டமக்ள் குஷி!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அதிரடி சலுகைகளுடன் கூடிய ரூ. 749 திட்டத்தை கொடுத்து வருகிறது. குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளும் வசதி, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மற்றும் முன்னணி ஓடிடி (OTT) சந்தாக்கள் என்று பல்வேறு நன்மைகள் இந்த ஒரே திட்டத்தில் கிடைக்கின்றன. இந்த திட்டத்தின் முழு விவரங்களை இப்போது பார்ப்போம்.

திட்டத்தின் விலை மற்றும் டேட்டா:
இந்த திட்டத்தின் விலை ரூ. 749 ஆகும். இதன் கால அளவு உங்கள் மாதாந்திர பில் சைக்கிள் (Bill Cycle) படி கணக்கிடப்படும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 100 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இந்த 100 ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு, பயன்படுத்தப்படும் ஒவ்வொரு ஜிபி டேட்டாவிற்கும் ரூ.10 என்ற வீதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஒரே Jio ரீசார்ஜ்.. 4 சிம் கார்டுகளுக்கு வேலிடிட்டி.. வாய்ஸ கால்கள்!

இருப்பினும், தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) முற்றிலும் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். இது தவிர, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் இந்தியா முழுவதும் எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) செய்து கொள்ளும்ப சலுகையும் இதில் உள்ளது.

குடும்ப உறுப்பினர்களுக்கான ஆட்-ஆன் (Add-on) வசதி:
இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமே, இதில் உங்கள் குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களை இணைக்க முடியும். அதிகபட்சம் 3 ஃபேமிலி சிம்களை (3 Family SIMs) இணைத்து கொள்ள முடியும். இந்த கூடுதல் சிம்களுக்கு மாதத்திற்கு ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படும். ஒவ்வொரு கூடுதல் குடும்ப சிம்மிற்கும் கூடுதலாக 5 ஜிபி டேட்டா மாதந்தோறும் வழங்கப்படும்.

இதன் மூலம் ஒரே திட்டத்தின் கீழ் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டாவை பயன் பெற முடியும். இதில் கூடுதலாக ஓடிடி சலுகைகள் மற்றும் இதர சலுகைகள் கிடைக்கின்றன. இதை பிரைமரி சிம் கார்டில் மட்டுமே பயன்படுத்த முடியும். கூடுதலாக இணைக்கப்படும் சிம் கார்டுகளில் கிடைக்காது.

ஓடிடி மற்றும் ஜியோவின் சிறப்பு சலுகைகள்:
இந்த ரூ.749 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பொழுதுபோக்கு மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் என ஏகப்பட்ட கூடுதல் சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. நெட்ஃபிளிக்ஸ் பேசிக் (Netflix (Basic) சந்தா மற்றும் 2 வருடம் செல்லுபடியாகும் அமோசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) ஆகியவரை இந்த திட்டத்தில் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ப்ரோ பிளான் (Google Gemini Pro) ஆனது ரூ.35,100 மதிப்பில் 18 மாதங்களுக்கான இதில் கிடைக்கிறது. இதனுடன் 5000 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ், நானோ பனானா போன்ற பிரத்யேக அணுகல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை தொடர்ந்து பெற வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ரூ.349 அல்லது அதற்கு மேற்பட்ட அன்லிமிடெட் 5ஜி திட்டத்தை தொடர்ந்து ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் கிடைக்கிறது. 3 மாதங்களுக்கு இந்த ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை இலவமாக பெறலாம். இதை தொடர்ந்து பெற வாடிக்கையாளர்கள் தங்கள் திட்டத்தை பில் காலாவதியான 48 மணி நேரத்திற்குள் புதுப்பிப்பதன் மூலம் 2ஆவது மற்றும் 3ஆவது மாத நன்மைகளைப் பெற முடியும். ஜியோடிவி (JioTV) அணுகல் கிடைக்கிறது.

மேலும், 50 ஜிபிக்கு இலவச கிளவுட் ஸ்டோரேஜ் வழங்கும் ஜியோ ஏஐ கிளவுட் (JioAICloud) வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. குறைந்த செலவில் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் தேவையான டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் கூடவே பொழுதுபோக்கு சலுகைகளை தேடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஜியோ ரூ. 749 போஸ்ட்பெய்ட் திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும்.

Best Mobiles in India

English summary
Jio Rs 749 Postpaid Plan With Upto 3 Add-on Family SIM Unlimited Voice Calls OTT Subscriptions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X