அதான் அம்பானி.. வெறும் ரூ.749 போதும்.. 3 சிம் கார்டு.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 100 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!
ஜியோ போஸ்ட்பெய்ட் (Jio Postpaid) கஸ்டமர்களுக்கு இதைவிட சலுகைகள் கொடுக்கும் திட்டம் வேறு இருக்க முடியாது என்று சொல்லும்படி ஒரு திட்டம் கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், 3 சிம் கார்டு கனெக்டிவிட்டி சலுகையை இது கொடுக்கிறது. இந்த ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
டெலிகாம் (Telecom) மார்கெட்டில் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு தனி இடம் இருக்கிறது. இருப்பினும், அதிகப்படியான கஸ்டமர்கள் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு செல்கின்றனர். ஆனால், அதில் கிடைக்கும் சலுகைகளைவிட இந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகள் இருக்கின்றன. அப்படியான சலுகைகளுடன் ஜியோ ரூ 749 போஸ்ட்பெய்ட் திட்டம் (Jio Rs 749 Postpaid Plan) கிடைக்கிறது.

இந்த திட்டத்தில் பிரைமரி சிம் கார்டு மட்டுமல்லாமல், 3 செகண்டரி சிம் கார்டுகளுக்கும் சலுகைகளை பெற்று கொள்ளும்படியான ஆப்ஷன் இருக்கிறது. இருப்பினும், ஒவ்வொரு சிம் கார்டு இணைப்புக்கும் ரூ.150 கட்டணம் இருக்கும் என்பதை மறந்துவிட கூடாது. அதாவது, திட்டத்தின் விலை ரூ 749ஆக இருந்தால் அதோடு ரூ 150 செலுத்தினால் கூடுதலாக ஒரு சிம் கார்டுக்கு (SIM Card) சலுகைகளை பெற்று கொள்ளலாம்.
ஜியோ ரூ 749 போஸ்ட்பெய்டு திட்ட விவரங்கள் (Jio Rs 749 Postpaid Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பிரைமரி சிம் கார்டுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை முதலில் பார்த்து விடுவோம். இந்த பிரைமரி சிம் கார்டுக்கு 100 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதற்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடையாது. ஆகவே, கூடுதல் டேட்டாவுக்கு உங்களிடம் கட்டணங்கள் வசூலிக்கப்படும்
ஆனால், வாய்ஸ் கால்களுக்கு அப்படி கிடையாது, ப்ரீபெய்ட் திட்டங்களை போலவே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் போக பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தாவை போஸ்ட்பெய்ட் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதில் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா கிடைக்கிறது.
இது பேசிக் (Basic) சலுகைகளை கொடுக்கும். அதேபோல அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தாவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் லைட் (Lite) சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த பிரீமியம் ஓடிடிகளுக்கு அடுத்து ஜியோ நிறுவனத்தின் ஜியோ சினிமா (Jio Cinema) சந்தாவும், ஜியோ டிவி (Jio TV) சந்தாவும் கொடுக்கப்படுகிறது. அதேபோல ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகையும் இருக்கிறது.
இதில் கிடைக்கும் அமேசான் பிரைம் வீடியோ சந்தாவை 2 வருடங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இப்போது, செகண்டரி சிம் கார்டுக்கு எப்படி சலுகைகள் கொடுக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம். இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பிரைமரி சிம் கார்டு இல்லாமல், கூடுதலாக 3 சிம் கார்டுகளை இணைத்து கொள்ளலாம். இதற்கு தலா ரூ 150 கட்டணம் வசூலிக்கப்படும்.
இதை செலுத்திவிட்டால், பிரைமரி சிம் கார்டுக்கு (Primary SIM Card) கிடைப்பதை போலவே செகண்டரி சிம் கார்டுக்கும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படும். ஆனால், டேட்டா சலுகை குறைவாகவே இருக்கும். அதாவது, ஒரு மாதத்துக்கு 5 ஜிபி டேட்டா மட்டுமே ஒதுக்கப்படும். இப்படியான சலுகைகள் இந்த ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








