Home
News

இனி 1 இல்ல.. 2 இல்ல.. 3 சிம்களுக்கு வாய்ஸ் கால்கள்.. 100ஜிபி டேட்டா.. ஒரே Jio ரீசார்ஜ் போதும்.. 3 ஓடிடி சந்தா!

ஜியோ (Jio) நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்கள், ஒரே ரீசார்ஜ் செய்து அதன் மூலம் 3 சிம் கார்டுகளுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை பெற்று கொள்ளலாம். பிரைமரி சிம் கார்டுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், 100 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற 3 ஓடிடி ஆப்களின் சந்தா, ஜியோ டிஜிட்டல் கோல்டு போன்ற சலுகைகள் கிடைக்கிறது. இந்த ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 749 திட்ட விவரங்கள் (Jio Rs 749 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 100 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்காது. ஆகவே, 1 ஜிபிக்கு ரூ.10 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொடுக்கப்படும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) கால்கள் கிடைக்கிறது.

இனி 1 இல்ல.. 2 இல்ல.. 3 சிம்களுக்கு வாய்ஸ் கால்கள்.. 100ஜிபி டேட்டா!

ரோமிங் வாய்ஸ் கால்களும் (Roaming Voice Calls) கொடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த போஸ்பெய்ட் திட்டத்தில் செய்து கொள்ளலாம். நெட்பிளிக்ஸ பேசிக் (Netflix Basic) மற்றும் அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தா கொடுக்கப்படுகிறது. இதுபோக ஜியோ டிவி (Jio TV) சந்தா கிடைக்கிறது. அமேசான் பிரைம் லைட் சந்தாவை 2 வருடங்களுக்கு பெறலாம்.

இந்த சலுகைகள் பிரைமரி சிம் கார்டுக்கு கொடுக்கப்படுகிறது. இதுபோக 3 சிம் கார்டுகளை இந்த திட்டத்தில் சேர்த்து கொள்ளலாம். ஒவ்வொரு சிம் கார்டுக்கும் கூடுதலாக ரூ.150 செலுத்தி சேர்க்க முடியும். இப்படி சேர்க்கும் சிம் கார்டுகளுக்கு அன்லிமிடெட், லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. 5 ஜிபி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, ஒரே ரீசார்ஜ் மூலம் ஒரு பிரைமரி மற்றும் 3 செகண்டரி சிம் கார்டுகளில் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகள் மட்டுமே இதுவரையில் கிடைத்தன. ஆனால், தீபாவளி பண்டிகையை அடுத்து பல்வேறு கூடுதல் சலுகைகள் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகளை இப்போது பார்க்கலாம்.

இதை பிரைமரி சிம் கார்டுகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த சலுகையில் முதலில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படுகிறது. இதை மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். ஆகவே, பில் சைக்கிள் முடிந்தவுடன் அடுத்த பில் சைக்கிளுக்கு சென்றால், மட்டுமே 3 மாதங்களுக்கு தொடர்ந்து இந்த சந்தாவை பயன்படுத்தி கொள்ள முடியும்.

ஆகவே, இந்த திட்டத்துக்கு கிடைக்கும் அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் மட்டுமல்லாமல், கூடுதலாக ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கிறது. இந்தியாவில் முதல் மூன்று இடத்தில் இந்த ஓடிடி ஆப்களே இருக்கின்றன. ஆகவே, பிரீமியம் ஓடிடிகள் மற்றும் அதற்காக அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகைகளை இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் பேக் செய்துள்ளது.

இந்த ஓடிடிகள் போக ஜியோஹோம் (Jio Home) சந்தாவை 2 மாதங்களுக்கு இந்த திட்டம் கொடுக்கிறது. இதை உங்களது ஜியோ நம்பர் மூலமாக புக்கிங் செய்து கொள்ளலாம். மைஜியோ ஆப் அல்லது ஜியோ வெப்சைட் மூலமாக இந்த புக்கிங் கிடைக்கிறது. இந்த ஜியோ ஹோம் திட்டத்தில் ஓடிடி ஆப்கள் மற்றும் லைவ் டிவி சேனல்களின் சந்தா கொடுக்கப்படுகிறது.

இதுபோக வை-பை டேட்டா சலுகையைும் பெற்று கொள்ளலாம். இந்த சலுகைக்கு அடுத்து 2 சதவீத கூடுதல் கோல்டு சலுகை கிடைக்கிறது. ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலமாக டிஜிட்டல் கோல்டு வாங்கும்போது, அதில் 2 சதவீத கூடுதல் கோல்டை பெற்று கொள்ளும்படி இந்த சலுகை கிடைக்கிறது. இதை +91-8010000524 எண்ணுக்கு மிஸ்-காஸ்டு கொடுத்து பெற்று கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 749 Postpaid Plan With Unlimited Voice 100GB Data Upto 3 SIM Cards Add Check Family Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X