Home
News

போட்டாரு பாரு அம்பானி.. 72 நாட்களுக்கு அன்லிமிடெட்.. வாய்ஸ் கால்கள்.. இலவமாக 20 ஜிபி டேட்டா.. 5ஜி டேட்டா!

இலவசமாக கொடுக்க ஜியோ (Jio) நிறுவனத்துக்கு சொல்லி கொடுக்கவா வேண்டும், கொடுத்தா அள்ளி கொடுக்குமே என்று சொல்லும்படி மீண்டும் இலவச டேட்டா சலுகையை கையில் எடுத்துள்ளது. 72 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), 164 ஜிபி டேட்டா (164GB Data) மற்றும் 100 எஸ்எம்எஸ் (100 SMS) சலுகை கொண்ட திட்டத்தில் இலவச டேட்டா (Free Data) மற்றும் அன்லிமிடெட் 5ஜி (Unlimited 5G) டேட்டாவை கொடுத்துள்ளது. இதுகுறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவைக்கு பிறகு அதிக டேட்டா கொண்ட திட்டங்களையே கஸ்டமர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ஏனென்றால், அதிகப்படியான டேட்டா மற்றும் வேகத்தில் பயன்படுத்த பழகிவிட்டனர். இதனாலேயே டேட்டா திட்டங்களில் மேலும் சலுகையை கொடுத்து கஸ்டமர்களை ரீசார்ஜ் செய்ய வைக்கிறது முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம்.

போட்டாரு பாரு அம்பானி.. 72 நாட்களுக்கு அன்லிமிடெட்.. வாய்ஸ் கால்கள்!

இப்படி ரூ.749 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டாவுக்கு குறையே இல்லாதபடி சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது. தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், இலவசமாக கூடுதல் டேட்டா சலுகையையும் கொடுக்கிறது. ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகள் போக இலவச டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம்.

ஜியோ ரூ 749 திட்ட விவரங்கள் (Jio Rs 749 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) டேட்டா சலுகையை முதலில் பார்த்துவிடுவோம். தினசரி டேட்டா 2 ஜிபி பயன்படுத்த கிடைக்கிறது. இந்த தினசரி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். இதுபோக ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம்.

இந்த டேட்டா சலுகைகளே போதுமானதாக இருக்கிறது. ஆனால், மேலும் 20 ஜிபி டேட்டாவை இந்த திட்டம் இலவசமாக கொடுக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 72 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், தினசரிக்கு 2 ஜிபி வீதம் 144 ஜிபி டேட்டா மற்றும் 20 ஜிபி கூடுதல் டேட்டாவை பெற்று கொள்ளலாம். இதற்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுக்கும் தொடர்பில்லை.

ஆகவே, இந்த திட்டத்தில் 72 நாட்களுக்கும் டேட்டாவுக்கும் பஞ்மில்லை. இப்போது, மற்ற சலுகைகள் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிடுவோம். டேட்டாவை போலவே இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Voice Calls) சலுகை 72 நாட்களுக்கும் குறையில்லாமல் கிடைக்கிறது.

தினசரிக்கு 2 ஜிபி டேட்டாவை போலவே தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ டிவி (JioTV) ஆப்களில் பிரீமியம் கன்டென்ட்களை தவிர இலவசமாக கிடைக்கும் கன்டென்ட்களை கஸ்டமர்கள் பார்த்து கொள்ளலாம். 2 மாதங்களுக்கும் மேல் அதிக டேட்டா கொண்ட திட்டத்துக்கு இதை ரீசார்ஜ் செய்யலாம்.

இதேபோல அன்லிமிடெட் டேட்டா சலுகையுடன் ஓடிடி ஆப் சந்தாவும் தேவைப்பட்டால், கூடுதல் விலைக்கு கிடைக்கும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் உங்களுக்கு சரியாக இருக்கலாம். இந்த திட்டத்தில் வேலிடிட்டியும் கூடுதலாகவே கிடைக்கிறது. ஆனால், திட்டத்தின் டேட்டா சலுகைகள் போக கூடுதல் டேட்டா (Extra Data) சலுகையை எதிர்பார்க்க முடியாது.

இந்த ஜியோ திட்டம் ரூ.1049 விலையில் கிடைக்கிறது. 84 நாட்களுக்கு வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையை கொடுக்கிறது. முந்தை திட்டத்தை போலவே 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுக்கிறது. ஓடிடி சலுகையாக அமேசான் பிரைம் வீடியோ லைட் சந்தாவை 84 நாட்களுக்கு கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 749 Plan With Unlimited Voice Calls 164GB Data 72 Days Validity Check Unlimited 5G Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X