Home
News

தூக்கி சாப்பிட்ட அம்பானி.. ரூ.749 திட்டத்துல 3 சிம் கார்டு.. அன்லிமிடெட் கால்கள்.. 5ஜி டேட்டா.. Jio-க்கு குஷி!

ஜியோ (Jio) கஸ்டமர்கள் அறக்க பறக்கும்படியான விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அமேசான் பிரைம் வீடியோ சந்தா, நெட்பிளிக்ஸ் சந்தா போன்ற சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக ஃபேமிலி சிம் கார்டுகளை இணைத்து கொள்ளலாம். அந்த சிம் கார்டுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா சலுகை கொடுக்கப்படும். இந்த ஜியோ திட்டம் குறித்த முழு விவரம் இதோ.

ஜியோ ரூ 749 திட்ட விவரங்கள் (Jio Rs 749 Plan Details): இந்த ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தில் (Jio Postpaid Plan) அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டா சலுகை போக 100 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 100 ஜிபிக்கு பிறகு 1 ஜிபிக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும்.

தூக்கி சாப்பிட்ட அம்பானி.. ரூ.749 திட்டத்துல 3 சிம் கார்டு.. வாய்ஸ்!

இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic) சந்தா மற்றும் அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தா கிடைக்கிறது.

இந்த அமேசான் பிரைம் லைட் சந்தாவை 2 வருடங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஓடிடி சந்தா போக வழக்கமாக கிடைக்கும் ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இப்போது, ஃபேமிலி சிம் கார்டு கனெக்சனுக்கு வருவோம். 3 சிம் கார்டுகளை இணைக்கலாம்.

இந்த சிம் கார்டுகளுக்கும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கும். அதேபோல டேட்டா சலுகையும் கிடைக்கிறது. ஆகவே, கூடுதலாக இணைக்கும் சிம் கார்டுக்கு 5 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படும். இதை மாதத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஒவ்வொரு கூடுதல் சிம் கார்டுக்கும் ரூ.150 வசூலிக்கப்படும்.

அதாவது, இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலை ரூ.749ஆக இருக்கிறது. அதோடு கூடுதல் சிம் கார்டுக்கு ரூ.150 செலவு செய்தால், 2 சிம் கார்டுகளுக்கும் டேட்டா, வாய்ஸ் கால்களை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கான வேலிடிட்டி மாதாந்திர கணக்கில் எடுத்து கொள்ளப்படும். இதைவிட கம்மி விலையில் ஒரேவொரு சிம் கார்டுக்கு திட்டம் இருக்கிறது.

ஜியோ ரூ 349 திட்ட விவரங்கள் (Jio Rs 349 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் 30 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு பிறகு 1 ஜிபிக்கு ரூ.10 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், 5ஜி டேட்டாவுக்கு கணக்கில்லை.

முந்தைய போஸ்ட்பெய்ட் திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல 100 எஸ்எம்எஸ்கள் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக சிம் கார்டுகளை இணைக்க முடியாது. மேலும், ஓடிடி சலுகைகளும் கொடுக்கப்படவில்லை. இருப்பினும், ஜியோ சலுகை வருகிறது.

அதாவது, ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோகிளவுட் ஆகிய ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, மலிவான விலையில் கூடுதல் சிம் கார்டுகளுக்கு சலுகைகள் வேண்டுமானால், முதலாவது போஸ்ட்பெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுங்கள். ஒரு சிம் கார்டுக்கு மலிவான விலையில் திட்டம் வேண்டுமானால், 2ஆவது திட்டத்துக்கு செல்லுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 749 Plan With Unlimited Voice Calls 100GB Data 3 Family SIM Connection Check Postpaid Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X