Home
News

5ஜிக்கு கும்பிடு.. மாதம் ரூ.233 போதும்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் டேட்டா.. வாய்ஸ் கால்கள்!

ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு மாதத்துக்கு ரூ.233 செலவில் 90 நாட்கள் வேலிடிட்டியோடு, அன்லிமிடெட் 5ஜி (Unlimited 5G) டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஜியோசினிமா, ஜியோடிவி போன்ற சலுகைகளையும் கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) பற்றி இங்கே பார்க்கபோகிறோம்.

ஜியோவின் 5ஜி சேவைகள் கிட்டத்தட்ட நாடு முழுவதும் கிடைக்கின்றன. இதனால், 4ஜி பிறகு 5ஜி சேவைக்கான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிவிக்கும் முனைப்பில் ஜியோ நிறுவனம் இருக்கிறது. இந்தாண்டின் 2ஆம் பாதியில் ஜியோ 5ஜி திட்டங்கள் அமலுக்கு வரும் என்று டெலிகாம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாதம் ரூ.233 போதும்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் டேட்டா!

ஆனாலும், இப்போது வரையில் மலிவான விலைக்கே அன்லிமிடெட் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. ஜியோ 5ஜி சேவைகள் கிடைக்கும் நகரங்களில் வெல்கம் ஆஃபர் மற்றும் 5ஜி போன் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு 4ஜி திட்டங்களின் மூலமாகவே 5ஜி சலுகை கொடுக்கப்படுகிறது. இதில் ரூ 749 திட்டம் மிரள வைக்கிறது.

ஜியோ ரூ 749 திட்ட விவரங்கள் (Jio Rs 749 Plan Details): ஜியோ 5ஜி சேவைகளை பெற குறைந்தபட்சம் ரூ 239 மதிப்புள்ள திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இருப்பினும், 28 நாட்களுக்கு மட்டுமே அதில் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆனால், ரூ 749 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், மாதத்துக்கு ரூ 233 செலவில் 5ஜியை பெற்று கொள்ளலாம்.

அதே நேரத்தில் 90 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த சலுகை மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்ஸ், ஜியோவின் பிரத்யேச சலுகைகளையும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாலம். ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

மொத்தமாக 180 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தினசரி டேட்டாவை பயன்படுத்திய பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. அதேபோல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் போக ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதே விலையில் கூடுதலாக ஓடிடி சலுகை வேண்டுமானால், ரூ 758 திட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

ஜியோ ரூ 758 திட்ட விவரங்கள் (Jio Rs 758 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் டேட்டா, எஸ்எம்எஸ், ஜியோ ஆப் சலுகைகள் மட்டுமல்லாமல், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், தினசரி 1.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது.

ஆகவே, மொத்தமாக 126 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். முந்தைய திட்டத்தை போலவே 1.5 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டத்திலும் செய்து கொள்ளலாம்.

அதோடு ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் சந்தா கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி சலுகையும் கொடுக்கப்படுகிறது. இவ்வளவு சலுகைகளுக்கு பிறகும் மூன்று மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதற்கு மாதாந்திரம் ரூ 252 செலவாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 749 Plan With 90 Days Validity Unlimited 5G Data Voice Calls Check Three Months Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X