Home
News

அதான் அம்பானி.. அடுத்த 72 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா.. 20 ஜிபி கூடுதல் டேட்டா!

ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு சில திட்டங்களில் மட்டுமே கூடுதல் டேட்டா கிடைக்கிறது. தினசரி டேட்டா, போஸ்ட் டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா போக கூடுதலாக லம்ப்-சம் டேட்டா கொடுக்கப்பட்டு உள்ளது. இப்போது, பார்க்க இருக்கும் திட்டத்திலும் 20 ஜிபிக்கான கூடுதல் டேட்டா கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ.749 திட்ட விவரங்கள் (Jio Rs 749 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 4 டேட்டா சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக கிடைக்கும் தினசரி டேட்டா (Daily Data), போஸ்ட் டேட்டா (Post Data) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மட்டுமல்லாமல், கூடுதல் டேட்டா (Extra Data) கொடுக்கப்பட்டு உள்ளது.

அதான் அம்பானி.. அடுத்த 72 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!

ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 2 ஜிபி தினசரி டேட்டா கொடுக்கும். இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகள் போக 20 ஜிபி டேட்டா (20GB Extra Data) கூடுதலாக கொடுக்கப்படும்.

72 நாட்கள் வேலிடிட்டியை இந்த திட்டம் கொடுத்து உள்ளது. ஆகவே, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் வேலிடிட்டி முழுவதும் 164 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டாவுடன் 20 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும். இந்த டேட்டாவை 4ஜி வேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் டேட்டா முற்றிலும் இலவமாக கிடைக்கும்.

டேட்டாவுக்கு அடுத்த முக்கிய சலுகையாக இருக்கும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வழக்கம்போலவே கிடைக்கின்றன. ஆகவே, 72 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. தினமும் 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்துக்கு ஜியோ ஸ்பெஷல் ஆஃபர் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல்/டிவி (JioHotstar Mobile/TV) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு 72 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைத்தாலும், இந்த ஓடிடியை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். ஆனால், 72 நாட்கள் வேலிடிட்டி முடிந்தவுடன் அடுத்த ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இந்த ஓடிடி சலுகைக்கு அடுத்து ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஜியோ கிளவுட் ஆப்பை மொபைல் நம்பர் வழியாக லாகின் செய்து 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) பெற்று கொள்ளலாம். மேலும், கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) சந்தா கிடைக்கிறது. 18 மாதங்களுக்கு கிடைத்து உள்ளது. இது பிரீமியம் சந்தாவாக இருக்கிறது.

ஆகவே, ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் மட்டுமல்லாமல், 2000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படும். நானோ பனானா அணுகலுடன் இமேஜ் ஜெனரேஷன் கொடுக்கப்படும். ஜியோ டிவி ஆப் (Jio TV) ஆப் சலுகையும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. தினசரி டேட்டா, கூடுதல் டேட்டா, 5ஜி டேட்டா, போஸ்ட் டேட்டாவுக்கு இந்த திட்டம் பக்கா ஆப்ஷாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 749 Plan With 72 Days Validity 2GB Data Per Day 20GB Extra Data Unlimited Voice Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X