Home
News

20GB டேட்டா இலவசம்.. Jio Hotstar சந்தா இலவசம்.. திகட்ட திகட்ட அள்ளித்தரும் Jio.. எந்த பிளான்? என்ன விலை?

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டம் 72 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (Jio 72 days validity plan) உடன் 20GB கூடுதல் இலவச டேட்டா (20GB extra data benefit) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் 460 மில்லியன் ஜியோ பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 20GB இலவச டேட்டா நன்மை கிடைக்கும் திட்டத்தின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்காக பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன் பல கோடி வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் திட்டங்களை ஜியோ தற்போது வழங்க துவங்கியுள்ளது. சமீபத்தில், OTT ஸ்ட்ரீமிங் சேவைகளின் வளர்ந்து வரும் பிரபலத்தால், மொபைல் டேட்டா நுகர்வு வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது.

20GB டேட்டா இலவசம்.. Jio Hotstar சந்தா இலவசம்.. 72 நாள் நன்மை..

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஜியோ நீண்ட செல்லுபடியாகும் காலம், வரம்பற்ற அழைப்பு மற்றும் கூடுதல் டேட்டாவை வழங்கும் ஒரு கவர்ச்சிகரமான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோவின் சலுகைகளில் சமீபத்திய சேர்க்கை, அடிக்கடி ரீசார்ஜ் செய்வதன் தொந்தரவைத் தணிக்கும் அதே வேளையில், அழைப்பு, டேட்டா பயன்பாடு மற்றும் OTT ஸ்ட்ரீமிங் ஆகியவற்றில் மன அமைதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ரீசார்ஜ் திட்டமாகும்.

ஜியோ ரூ.749 திட்டம் மலிவு விலையில் ஒரு சிறந்த தேர்வாக அமைத்துள்ளது. காரணம் இது குறைந்த விலையில் அற்புதமான நன்மைகளை வழங்கியுள்ளது. இந்த திட்டம் ரூ. 749 விலையில் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம். இந்த திட்டம் 72 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. அணைத்து நெட்வொர்க் அழைப்புகளும் இலவசமாக பயன்படுத்த கிடைக்கிறது.

Jio 749 Plan என்ற இந்த திட்டம் தினமும் 2GB டேட்டா நன்மையை என்ற வகையில், 72 நாட்களுக்கு மொத்தமாக 164GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் ஜியோ நிறுவனம் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் சேர்த்து வழங்கி அசத்தியுள்ளது. OTT விருப்பங்கள் மற்றும் டேட்டா நன்மையை இப்போது மக்கள் அதிகம் பயன்படுத்துவதனால், ஜியோ நிறுவனம் இந்த திட்டத்துடன் இலவச டேட்டா நன்மையையும் சேர்த்து கூடுதலாக வழங்குகிறது.

ஜியோ வலைப்பக்க தகவலின்படி, ஜியோ ரூ. 749 திட்டம் இந்த திட்டத்தின் பயனர்களுக்கு 20GB கூடுதல் டேட்டா நன்மையை வழங்குகிறது. இது உங்களுக்கு கூடுதல் டேட்டா பயன்பாட்டை உறுதி செய்கிறது. உங்களுடைய தினசரி டேட்டா நன்மையான 2GB டேட்டா நன்மை நிறைவுபெற்றால், நீங்கள் எந்தவித தடையுமின்றி இந்த 20GB டேட்டா நன்மையில் இருந்து டேட்டா பயன்பாட்டை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த கூடுதல் இலவச டேட்டா நன்மையையும் தீர்ந்த பிறகு, ஜியோ நிறுவனம் உங்களுக்கு 64Kbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா நன்மையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நன்மைகள் தவிர, ஜியோ 749 திட்டம் இன்னும் பல கூடுதல் நன்மைகளை இலவசமாக வழங்குகிறது. இந்த திட்டம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hoststar) சந்தாவை இலவசமாக வழங்குகிறது.

இது தவிர, இந்த திட்டம் 50GB அளவிலான இலவச ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் நன்மையை வழங்குகிறது. இது உங்களுக்கு ஜியோ கிளவுட் நன்மையின் கீழ் இலவசமாக கிடைக்கிறது. அடுத்தபடியாக, இந்த திட்டம் ஜியோ டிவி சந்தாவையும் இலவசமாக வழங்குகிறது. இது பல நூறு வகையான டிவி சேனல்களை உங்கள் போனில் காண அனுமதிக்கிறது. இத்தகைய நன்மைகளை ஒன்று சேர்த்து வழங்குவதால், இந்த திட்டம் சிறந்த திட்டமாக இப்போது ஜியோ பயனர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X