20GB FREE டேட்டாவுடன் Jio 72 நாள் பிளான்.. அள்ளிஅள்ளி கொடுக்கும் அம்பானி.. எந்த விலை திட்டம்னு உடனே பாருங்க..
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) தனது வடிக்கையாளர்களுக்காகக புதிய 72 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட புது ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஜியோ 72 நாள் வேலிடிட்டி திட்டத்துடன் (Jio 72 days validity plan) ஜியோ நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு சந்தையை மீண்டும் புரட்டிப்போட்டுள்ளது. நீண்ட கால செல்லுபடியாகும் காலத்திற்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஜியோ (Jio) திட்டம் பல்வேறு நன்மைகளுடன் வருகிறது. இந்த திட்டத்தின் முழு நன்மை விபரங்களை பற்றி பார்க்கலாம்.
ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம் ஜியோ ரூ. 749 திட்டம் (Jio Rs 749 Plan) என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் அனைத்து வகையான நன்மைகளை பேக் செய்து, ஜியோ பயனர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. புதிய ஜியோ 749 பிளான் (Jio 749 Plan) என்ன நன்மைகளை வழங்குகிறது என்று இப்போது பார்க்கலாம்.

20GB FREE டேட்டாவுடன் Jio 72 நாள் பிளான்.. அள்ளிஅள்ளி கொடுக்கும் அம்பானி:
ஜியோ ரூ. 749 திட்டம் (Jio Rs 749 Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இது அணைத்து நெட்வொர்க்கு லோக்கல் (Local), STD மற்றும் இலவச ரோமிங் (roaming) சேவைகளை வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையை 72 நாட்களுக்கு எந்தவித தடையுமில்லாமல் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பயனர்கள் முழுமையாக தொலைத்தொடர்பு (telecom) சேவையுடன் இணைந்திருப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த திட்டத்தின் முக்கிய ஈர்ப்பாக, இத்துடன் கிடைக்கும் ஜியோ ட்ரூ 5G அன்லிமிடெட் சேவை (Jio True 5G Unlimited) அணுக கிடைக்கிறது. இது ஜியோவின் 5ஜி நெட்வொர்க்கின் (Jio 5G network) கீழ் அன்லிமிடெட் டேட்டா (Unlimited data) பயன்பாட்டை பயன்படுத்த அனுமதிக்கிறது. இந்த திட்டம் இது தவிர தினசரி 2GB டேட்டா நன்மையையும் வழங்குகிறது.
ஜியோ ரூ. 749 திட்டம் (Jio Rs 749 Plan):
இது 72 நாட்கள் காலத்திற்கு 144GB என்ற மொத்த டேட்டா நன்மையை (144GB of total data benefit) வழங்கி அசத்துகிறது. இது நாள் ஒன்றுக்கு 2GB டேட்டாவை (Jio 2GB data daily) வழங்குகிறது. இத்துடன் கூடுதல் சேர்ப்பாக, இந்த திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் இலவசமாக 20GB டேட்டா நன்மையையும் (Jio's Extra 20GB free data benefit) இந்த திட்டம் வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.
ஜியோ அதிக டேட்டா நன்மையை விரும்பும் பயனர்களின் தேவைகளை தெளிவாக புரிந்துகொண்டு இத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் அன்லிமிடெட் டேட்டா நன்மை, தினசரி 2GB டேட்டா நன்மை மற்றும் எக்ஸ்ட்ரா இலவசமாக 20GB டேட்டா நன்மை (Extra free data benefits) என்று டேட்டாவை வாரி வழங்கியுள்ளது. இத்துடன் ஜியோ நிறுவனம் கூடுதல் இலவசங்களை வழங்கியும் அசத்தியுள்ளது.
கூடுதல் இலவச நன்மைகள்:
ஜியோவின் டிஜிட்டல் பொழுதுபோக்கு தளங்களுக்கான இலவச அணுகலை இந்த திட்டத்துடன் வழங்குவதன் மூலம் பயனர் அனுபவத்தை இன்னும் அதிகமாக மேம்படுத்தியுள்ளது. இதில் ஜியோ சினிமா (Jio Cinema) சந்தா, ஜியோ டிவி (Jio TV) சந்தா, மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சந்தா ஆகியவற்றை இந்த திட்டம் இலவசமாக வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








