ஜியோ சிம் இருக்கா.. அன்லிமிடெட் சலுகைகள்.. எக்ஸ்ட்ரா டேட்டா.. இந்த 2 திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க..
ஏர்டெல், VI நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ (Jio) நிறுவனம். குறிப்பாக நாட்டில் ஜியோ நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், பட்ஜெட் விலை திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா தரும் இரண்டு திட்டங்களை வைத்துள்ளது ஜியோ.
அதாவது ஜியோ நிறுவனத்தின் ரூ.749 மற்றும் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டங்கள் தான் எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையை வழங்குகிறது. இப்போது இந்த திட்டங்களின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 749 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை. குறிப்பாக இந்த திட்டம் 72 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இந்த ஜியோ நிறுவனத்தின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 164ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்க.
இந்த ஜியோ ரூ749 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.
மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த ஜியோ திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud)ஆகியவற்றுக்கான அணுகல் கூட இதில் உள்ளது.குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G data) போன்ற அசத்தலான நன்மைகளை இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் நாம் பெறமுடியும்.
ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மை இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும்.
குறிப்பாக ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த ஜியோ திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud)ஆகியவற்றுக்கான அணுகல் இதில் உள்ளது. பின்பு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G data) போன்ற அசத்தலான நன்மைகளை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.
குறிப்பாக ஜியோவின் ரூ.749 மற்றும் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டங்கள் அதிக வேலிடிட்டி மற்றும் எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையை வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். அதேபோல் ஜியோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








