Home
News

அடி தூள்.. 90 நாள் வேலிடிட்டி, 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா, அன்லிமிடெட் சலுகைகள் தரும் இரண்டு Jio திட்டங்கள்..

ஜியோ (jio) நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தினாலும் இன்னும் சில திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்கி வருகிறது. அதாவது இந்நிறுவனம் ரூ.749 மற்றும் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்கி வருகிறது. இப்போது இந்த 2 திட்டங்களின் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 749 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 72 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். மேலும் இந்த திட்டத்தில் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 164ஜிபி டேட்டா கிடைக்கும்.

அடி தூள்.. 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா தரும் 2 Jio திட்டங்கள்..

ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்கப்படுகிறது.

அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது இந்த புதிய ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். மேலும் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையும் இந்த திட்டத்தில் உள்ளது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.

ஆனால் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகள் இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

அடி தூள்.. 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா தரும் 2 Jio திட்டங்கள்..

இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்குகிறது ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud போன்றவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.

அதேபோல் ஒரு மாதம் திட்டங்களைத் தேர்வு செய்வதை விட மூன்று மாதம் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா நன்மைகளைத் தேர்வு செய்வது நல்லது. அதுவும் ரூ.749 மற்றும் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் இருப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். குறிப்பாக ஜியோ நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.மேலும் ஜியோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 749 and Rs 899 plans offering 20GB extra data and unlimited calls: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X