Home
News

தலைவன் Jio-க்கு ஒரு கும்பிடு.. கம்மி பட்ஜெட்டில் 200ஜிபி டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. யாரு விடுவா?

வோடபோன் ஐடியா (vi), ஏர்டெல் (airtel) நிறுவனங்களை விட கம்மி படஜெட்டில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ (Jio) நிறுவனம். அதுவும் ஜியோ நிறுவனம் சில கம்மி பட்ஜெட் திட்டங்களில் ஓடிடி மற்றும் அதிக டேட்டா நன்மைகளை வழங்குகிறது. எனவே தான் ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் அதிக டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தலைவன் Jio-க்கு ஒரு கும்பிடு.. கம்மி பட்ஜெட்டில் 200ஜிபி டேட்டா.. OTT!

ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 749 recharge plan) தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். ,Jjtpu இந்த திட்டத்தில் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது. எனவே இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 164ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்கப்படுகிறது.

அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோகிளவுட் (JioCloud) அன்லிமிடெட் 5ஜி டேட்டா போன்ற பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த புதிய ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அதுபோக 20ஜிபி இலவச டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

குறிப்பாக ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம்
மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். மேலும் 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார்(JioHotstar) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் ஜியோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs.749 and Rs.859 prepaid plans Validity and benefits: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X