Home
News

ஜியோ ரூ.719 மற்றும் ரூ.749 திட்டம்.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எது சிறந்தது?

Jio Rs 719 vs Rs 749 recharge plan: ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஜியோ (Jio) நிறுவனம். குறிப்பாக ஜியோ கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் ஜியோ ரூ.719 மற்றும் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது.

குறிப்பாக இந்த இரண்டு திட்டங்களும் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகின்றன. மேலும் இந்த திட்டங்களில் உள்ள நன்மைகள் என்னென்ன மற்றும் எதைத் தேர்வு செய்வது நல்லது என்பது குறித்து இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.719 மற்றும் ரூ.749 திட்டம்.. எது சிறந்தது?

ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 719 recharge plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். குறிப்பாக நீங்கள் இந்த ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 140ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம்.

மேலும் இந்த ஜியோ ரூ.719 திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 749 recharge plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். அதேசமயம் இந்த திட்டத்தில் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 164ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.

குறிப்பாக ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்கப்படுகிறது.

தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது இந்த புதிய ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம். ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மை மட்டும் வழங்கப்படவில்லை.

எனவே ஜியோவின் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டத்தை விட ரூ.749 திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது. அதாவது 30 ரூபாய் கூடுதலாக செலுத்தினால் எகஸ்ட்ரா டேட்டா நன்மை மற்றும் 2 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கிறது. எனவே ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது தான் மிகவும் நல்லது. அதேபோல் ஜியோ நிறுவனம் இன்னொரு எக்ஸ்ட்ரா டேட்டா தரும் திட்டத்தையும் வைத்துள்ளது.

ஜியோ ரூ.719 மற்றும் ரூ.749 திட்டம்.. எது சிறந்தது?

அதாவது ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 recharge plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 200 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த ஜியோ ரூ.899 திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது.

இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ்,ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 719 vs Rs. 749 Plan: Do you know the benefits of paying Rs 30 extra
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X