அறக்க பறக்குது ரீசார்ஜ்.. ரூ.719-க்கு 70 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 140 ஜிபி டேட்டா!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் கட்டண உயர்வுக்கு பிறகு எந்த திட்டத்தில் நல்ல சலுகைகள் வருகிறதோ அதையே ரீசார்ஜ் செய்துவிடுவோம் என்ற மனநிலைக்கு ஜியோ கஸ்டமர்கள் சென்றுவிட்டனர். இவர்களில் 2 மாதங்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு பக்கா சலுகைகளுடன் ஒரு ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) இருக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா முதல் வாய்ஸ் கால்கள் வரையில் அனைத்து சலுகைகளும் இதில் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஜியோ ரூ 719 திட்ட விவரங்கள் (Jio Rs 719 Plan Details): இந்த திட்டம் 2 மாதங்களுக்கும் அதிகமான வேலிடிட்டியை கொடுக்கிறது. இந்த நாட்களில் பெரும்பாலான சலுகைகள் கிடைக்கிறது. அதாவது, தினசரி டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால்கள் போன்ற முக்கிய சலுகைகளும், ஜியோ ஆப்ஸ் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimted 5G Data) சலுகையும் வருகிறது.

ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இது 2 மாதத்தைவிட கூடுதலாகும். இந்த நாட்களில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையை பெற்று கொள்ள முடியும். ஆகவே, மொத்தமாக 140 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்கிறது.
அதேபோல 2 ஜிபிக்கு பிறகு பேர் யூசேஜ் பாலிசி சலுகையின் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். 70 நாட்களில் எந்தவித டேட்டா குறையும் இன்றி இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் (SMS) சலுகை கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது.
ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் எல்லாம் போக ஜியோ ஆப்ஸ் (Jio Apps) சலுகையும் கிடைக்கிறது. ஜியோசினிமா (JioCinema), ஜியோடிவி (JioTV) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதே பட்ஜெட்டில் கூடுதல் டேட்டா மற்றும் வேலிடிட்டி வேண்டுமானால் மற்றொரு திட்டம் இருக்கிறது.
ஜியோ ரூ 749 திட்ட விவரங்கள் (Jio Rs 749 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா சலுகைக்கு துளியும் குறைவே கிடையாது. முந்தைய திட்டத்தை போலவே 2 ஜிபி டேட்டா நாளொன்றுக்கு கிடைக்கிறது. ஆனால், கூடுதலாக 20 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். அதேபோல 72 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 144 ஜிபி டேட்டாவுக்கும் மேல் பயன்படுத்தி கொள்ள முடியும்.
அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகளுக்கு மேல் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை வருகிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை ஜியோ கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.
வழக்கமான ஜியோசினிமா, ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட் ஆகிய ஆப்களின் சந்தாவும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. இந்த 2 திட்டங்களுக்கும் 2 மாதங்களுக்கும் மேல் சலுகைகளை கொண்டுள்ளன. ஆகவே, 60 நாட்களுக்கும் மேல் வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் அதிக டேட்டா தேவைப்படும் கஸ்டமர்கள் இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








