இதுபோதுமே அம்பானி சார்.. 70 நாட்களுக்கு நோ டென்ஷன்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!
ஒரு மாதம் வேலிடிட்டி வேண்டாம், 2 மாதங்கள் வேலிடிட்டி வேண்டாம், அதேபோல 90 நாட்கள் வேலிடிட்டியும் வேண்டாம், இதற்கிடையில் ஏதாவது வேலிடிட்டி கொண்ட திட்டம் இருக்கிறதா என்று கேட்கும் ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு பெஸ்ட் ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) ஒன்று இருக்கிறது. இதில் அதிகப்படியான டேட்டா சலுகைகள் மற்றும் வழக்கமான வாய்ஸ் கால்கள், ஓடிடி சலுகைகள் கிடைக்கின்றன. இந்த 70 நாட்கள் ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 719 திட்ட விவரங்கள் (Jio Rs 719 Plan Details): இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் 5ஜி டேட்டா சலுகைகள் மட்டுமல்லாமல், அண்மையில் சேர்க்கப்பட்ட ஜியோ அன்லிமிடெட் ஆஃபரும் (Jio Unlimited Offer) கிடைக்கிறது. இந்த கூடுதல் சலுகையில் ஓடிடி மற்றும் கிளவுட் ஸ்டோர்ஜ் கொடுக்கப்படுகிறது.

முதலில் திட்டத்துக்கு கிடைக்கும் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 70 நாட்கள் வேலிடிட்டி வருகிறது, இந்த நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை (Daily 2GB Data) பயன்படுத்தலாம். இந்த டேட்டா 4ஜி வேகத்தில் கொடுக்கப்படும். இதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகை கிடைக்கிறது.
மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. ஆகவே, 4ஜி டேட்டா கணக்கில்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்று கொள்ளலாம். 4ஜி டேட்டாவை 70 நாட்களுக்கு கணக்கிட்டால், 140 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 5ஜி டேட்டாவும் கிடைப்பதால், இது அதிகப்படியான டேட்டா திட்டம் என்று சொல்லலாம்.
இந்த டேட்டாவை போலவே வாய்ஸ் கால்கள் சலுகையும் கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல் வாய்ஸ் கால்கள் (Unlimited Local Voice Calls) தொடங்கி அன்லிமிடெட் எஸ்டிடி (Unlimited STD) மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்களை (National Roaming Voice Calls) இந்த ஜியோ 70 நாட்கள் திட்டம் (Jio 70 Days Plan) கொடுக்கிறது. எஸ்எம்எஸ் சலுகைகள் வழக்கம்போலவே இருக்கின்றன.
அதாவது, தினசரிக்கு 100 என்னும் வழக்கமாக கணக்கில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் சலுகையின் கீழ் ஜியோ டிவி (Jio TV) சலுகை கிடைக்கிறது. இதுவரையில் பார்த்த சலுகையில் அனைத்தும் திட்டத்துக்கு கிடைத்த சலுகைகளாகும். இப்போது, ஜியோ அன்லிமிடெட் ஆஃபரை பார்க்கலாம். இது கூடுதல் சலுகைகள் மட்டுமே. இப்போதைக்கு கிடைக்கிறது.
இந்த அன்லிமிடெட் சலுகையில் 3 மாதங்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கிடைக்கிறது. இந்த சந்தாவை முழுமையாக பெறுவதற்கு அடுத்த ரீசார்ஜ் உடனடியாக செய்யப்பட வேண்டும். அதாவது, இந்த திட்டத்துக்கு 70 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி வருகிறது. ஆனால், ஓடிடிக்கு 90 நாட்கள் சந்தா கிடைக்கிறது.
ஆகவே, மீதமுள்ள 20 நாட்கள் சந்தாவை தொடர்ந்து பெறுவதற்கு 70 நாட்கள் வேலிடிட்டி முடிந்தவுடன் அடுத்த ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இந்த புது ரீசார்ஜை 48 மணி நேரத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே, உங்களுக்கு ஓடிடி சந்தா தொடர்ந்து கொடுக்கப்படும். இந்த சலுகைக்கு அடுத்து 50 ஜிபி ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) ஸ்டோரேஜ் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








