கப் சிப்னு ரீசார்ஜ்.. அடுத்த 70 நாட்கள் வேலிடிட்டி.. 2 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. Jio யூசர்கள் குஷி!
ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்டு கஸ்டமர்கள் அடுத்த 70 நாட்களுக்கு நல்ல சலுகைகளுடன் ரீசார்ஜ் வேண்டுமானால், இப்போது பார்க்க இருக்கும் ப்ரீபெய்டு திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல் கூடுதலாக பல்வேறு சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும். இந்த ப்ரீபெய்டு திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்வோம்.
ஜியோ நிறுவனத்தில் 70 நாட்கள், 72 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. இதில் 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஜியோ ரூ 719 திட்டம் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா முதல் பிரீமியம் ஓடிபி சந்தா வரையில் இதில் கிடைக்கிறது. இதுபோக ஜெமினி ப்ரோ சந்தாவும் கொடுக்கப்படுகிறது.

ஜியோ ரூ 719 திட்ட ஆஃபர்கள் (Jio Rs 719 Plan Offers): 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை மூன்றாக பிரித்து கொள்ளலாம். முதலில் வழக்கமாக கிடைக்கும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் உள்ளன. 2ஆவதாக ஜியோ நிறுவனத்தின் ஸ்பெஷல் சலுகைகள் கிடைக்கும். மூன்றாவது ஜெமினி ப்ரோ சலுகை கிடைக்கும்.
2 ஜிபி டேட்டாவை இந்த திட்டம் தினசரிக்கு கொடுத்து இருக்கிறது. ஆகவே, 70 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் 140 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். ஆனால், ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவைகளை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, அதிக டேட்டாவை விரும்பும் கஸ்டமர்களுக்கு பொருந்தமாக இருக்கும்.
மேலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும் போஸ்ட் டேட்டாவை (Post Data) சலுகையைும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். அதே நேரத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் (Roaming Voice Calls) சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த மூன்று சலுகைகளுக்கு அடுத்து ஜியோ டிவி (Jio TV) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. ஜியோ நிறுவனத்தின் ஸ்பெஷல் சலுகைகளை பார்க்கையில், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு 70 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தாலும், ஓடிடி சந்தாவுக்கு 3 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதை மொபைல் மட்டுமல்லாமல், டிவியிலும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும், ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இதில் 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டு உள்ளது. மூன்றாவது சலுகையாக ஜெமினி ப்ரோ (Gemini Pro) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகை 18 மாதங்களுக்கு கிடைக்கும். சொல்லப்போனால், இந்த சலுகையின் மதிப்பு ரூ.35100 ஆக இருக்கிறது. இதேபோல 90 நாட்களுக்கு மற்றொரு திட்டம் உள்ளது.
ஜியோ ரூ 899 திட்ட ஆஃபர்கள் (Jio Rs 899 Plan Offers): முந்தைய திட்டத்தில் கிடைத்த சலுகைகள் அப்படியே இந்த திட்டத்துக்கும் கிடைக்கும். ஆனால், வேலிடிட்டி கூடுதலாக கிடைக்கும். ஆகவே, மொத்த டேட்டாவும் அதிகமாக கிடைக்கும். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 90 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கும்.
மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகைகள் கிடைக்கும். மேலும், ஜியோஹாட்ஸ்டார் சந்தா மூன்று மாதங்களுக்கு கிடைக்கும். ஜியோ ஏஐ கிளவுட் வழியாக 50 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்படும். ஜெமினி ப்ரோ சந்தாவும் 18 மாதங்களுக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications