அம்பானி ஆட்டம்.. மாதம் ரூ.699 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஓடிடி சந்தா.. ஃபேமிலி சிம் கனெக்சன்!
ஜியோ நிறுவனம் சில திட்டங்களுக்கு நம்ப முடியாத சலுகைகளை கொடுக்கிறது. அப்படி வெறும் ரூ.699 விலையில் கிடைக்கும் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 ஜிபி டேட்டா, அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் மட்டுமால்லாமல், ஃபேமிலி சிம் கனெக்சன் சலுகையையும் கொடுக்கிறது.
ஜியோ ரூ 399 திட்ட விவரங்கள் (Jio Rs 399 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் (Postpaid Plan) டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் மட்டுமல்லாமல், பேமிலி சிம் கனெக்சன் (Family SIM Connection) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகைகளும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு மொத்தமாக 75 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், அன்லிமிடெட் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) வாய்ஸ் கால்களை வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம்.
இந்த சலுகைகள் போக 3 ஃபேமிலி சிம் கார்டுகளை இணைத்து கொள்ள முடியும். இதற்கு திட்டத்தின் விலை மட்டுமல்லாமல், ஒவ்வொரு கூடுதல் சிம் கார்டுக்கும் ரூ.99 செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால், அந்த சிம் கார்டுக்கும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி சலுகை முடியும் வரையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை வழங்கப்படும்.
அதோபோல 5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதோடு ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷனை பயன்படுத்தலாம். மேலும், ஜியோ அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா (Jio Unlimited Trur 5G Data) சலுகை கொடுக்கப்படுகிறது.
இந்த சலுகை ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் இடங்களில், ஜியோ வெல்கம் ஆஃபர் சலுகை பெறும் கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியதாகும். இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதேபோல ஃபேமிலி சிம் கனெக்சன் சலுகையோடு ஓடிடி சலுகைகளும் வேண்டுமானால், ரூ 699 திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.
ஜியோ ரூ 699 திட்ட விவரங்கள் (Jio Rs 699 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், ஜியோ ஆப் சப்ஸ்கிரிப்ஷன், அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் ஃபேமிலி சிம் கனெக்சன் போன்ற சலுகைகள் மட்டுமல்லாமல், 2 ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனும் கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், மொத்தமாக 100 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதற்கு தினசரி லிமிட் கிடையாது. வேலிடிட்டி நாட்களில் முழுவதும் பயன்படுத்த முடியும். அதன்பிறகு 1 ஜிபிக்கு ரூ 10 வசூலிக்கப்படும். அதோடு நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்திலும் 3 ஃபேமலி சிம் கார்டுகளை வாடிக்கையாளர்கள் இணைத்து கொள்ள முடியும். இதற்கும் ரூ 99 கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த கூடுதல் சிம் கார்டுகளுக்கு தலா 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது பிரைமரி சிம் டேட்டாவில் இருந்து கழிக்கப்படாது.
அதேபோல அனைத்து சிம் கார்டுகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை வழங்கப்படுகிறது. இவ்வளவு சலுகைகள் போக 2 முன்னணி ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. ஆகவே, நெட்பிளிக்ஸ் பேஸிக் (Netflix Basic) மற்றும் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், முந்தைய திட்டத்தை போலவே ஜியோசினிமா, ஜியோ டிவி, ஜியோகிளவுட் ஆப்களை பயன்படுத்தலாம். இந்த திட்டத்துக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஒரே திட்டத்தில் 4 சிம் கார்டுகளுக்கு சேவை தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு இந்த 2 திட்டங்களும் பொருத்தமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








