நெட்பிளிக்ஸ் ப்ரீ.. ஒரே திட்டத்தில் 100GB டேட்டா.. அன்லிமிடெட் கால்.. பேமிலி சிம் கனெக்சன்.. OTT சந்தா!
வெறும் ரூ.699 செலவில் பேமிலி சிம் கார்டு கனெக்சன், 100 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? இந்த திட்டத்தின் முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஜியோ ரூ 699 திட்ட விவரங்கள் (Jio Rs 699 Plan Details): இதுவொரு போஸ்ட்பெய்ட் திட்டமாகும். இந்த திட்டத்தில் ஒரு பிரைமரி சிம் கார்டு மற்றும் 5 கூடுதல் சிம் கார்டுகளை இணைந்துக் கொள்ள முடியும். அதாவது, இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்த பின்பு, கூடுதலாக இணைக்கும் ஒவ்வொரு சிம் கார்டுக்கும் தலா ரூ.99 கட்டணமாக செலுத்த வேண்டும்.

முதலில் ரூ.699 செலுத்தி ரீசார்ஜ் செய்யும் சிம் பிரைமரி சிம் கார்டாக கருதப்படும். அதோடு நீங்கள் 3 சிம் கார்டுகளை இணைக்கிறீர்கள் என்றால், ஒவ்வொரு சிம் கார்டுக்கும் தலா ரூ.99 வீதம் மொத்தம் ரூ.297 கட்ட வேண்டும். அப்படி கட்டினால், மொத்தமாக 4 சிம் கார்டுகளுக்கும் சேர்த்து டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் ஓடிடி போன்ற சலுகைகள் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் 100 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், நெட்பிளிக்ஸ் பேஸிக் (Netflix Basic), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படும்.
இந்த திட்டத்தில் குடும்ப சிம் கார்டுகளை இணைக்கும் பட்சத்தில் தலா 5 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படும். அதாவது, நீங்கள் 3 சிம் கார்டுகளை இணைத்துள்ளீர்கள் என்றால், 5 ஜிபி வீதம் மொத்தம் 15 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும். அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையை குடும்ப சிம் கார்டு உறுப்பினர்களும் பெறலாம்.
இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களாகும். அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை பெறும் கஸ்டமர்களுக்கு, இந்த திட்டத்திலும் இலவச 5ஜி சேவை வழங்கப்படும். இப்படி ஏராளமான சலுகைகளை இந்த ரூ 699 திட்டம் கொண்டிருக்கிறது. இதேபோல ரூ 1499 விலையில் கிடைக்கும் மற்றொரு போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பிரம்மாண்ட சலுகைகள் கிடைக்கிறது. அதுகுறித்த விவரங்களை பார்ப்போம்.
ஜியோ ரூ 1499 திட்ட விவரங்கள் (Jio Rs 1499 Plan): இந்த திட்டத்துக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 300 ஜிபி டேட்டா வழங்கப்படும். அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.
முந்தைய திட்டத்தைப் போலவே, நெட்பிளிக்ஸ் மொபைல் (Netflix Mobile), அமேசான் பிரைம் வீடியோ, ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படும். இந்த திட்டத்தில் குடும்ப சிம் கார்டுகளை இணைத்துக் கொள்ள முடியாது. ஆனால், ரூ.99 கூடுதலாக செலுத்தினால், ஜியோபிரைம் (JioPrime) சலுகையை பெற முடியும்.
இதில் வரும் ஜியோசினிமா பிரீமியம் சலுகைகளை வழங்காது. இந்த திட்டத்தில் இன்டர்நேஷனல் ரோமிங் (International Roaming) சலுகை கொடுக்கப்படுகிறது. அமெரிக்காவில் (USA) இந்த திட்டத்தின் சிம் கார்டுகளை பயன்படுத்தினால், 5 ஜிபி டேட்டா, 500 நிமிடங்கள் வாய்ஸ் கால் சலுகைகள் கொடுக்கப்படும்.
அதேபோல அரபு அமீரகத்தில் 1 ஜிபி டேட்டா மற்றும் 300 நிமிடங்கள் வாய்ஸ் கால் சலுகைகள் கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 300 ஜிபி டேட்டாவை முழுமையாக பயன்படுத்திவிட்டால், அதன்பின் 1 ஜிபிக்கு ரூ.10 வசூலிக்கப்படும். இந்த திட்டத்திலும் ஜியோ அன்லிமிடெட் 5ஜி (Jio Unlimited 5G) சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications