பிச்சிக்குது ரீசார்ஜ்.. வெறும் ரூ.699 போதும்.. 3.3GB டேட்டா.. அன்லிமிடெட் 5G.. வாய்ஸ் கால்ஸ்.. 2 ஓடிடி சந்தா!
ஜியோ போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களை அறக்க பறக்க செய்யும் விதமாக மலிவான விலையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள் சலுகைகள் மட்டுமல்லாமல், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் கொண்ட 2 திட்டங்களை பார்ப்போம்.
ஜியோ ரூ 299 திட்ட விவரங்கள் (Jio Rs 299 Plan Details): இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data), எஸ்எம்எஸ் (SMS), ஜியோ ஆப்ஸ் (Jio Apps) சப்ஸ்கிரிப்ஷன் மட்டுமல்லாமல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கொடுக்கப்படுகிறது. இதுவொரு போஸ்ட்பெய்ட் திட்டமாகும்.

சொல்லப்போனால், ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டங்களில் (Jio Postpaid Plans) மிகவும் கம்மியான விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை கொடுக்கும், ஒரே திட்டமாக இந்த ரூ 299 திட்டம் இருக்கிறது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) வாய்ஸ் கால் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.
அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ள முடியும். இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 30 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. இது லம்ப்சம் டேட்டாவாகும். ஆகவே, டெய்லி லிமிட் கிடையாது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி நாட்களில் எப்போது வேண்டுமானலும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த டேட்டாவை காலி செய்த பிறகு 1 ஜிபிக்கு ரூ 10 வீதம் வசூலிக்கப்படும்.
இதற்கு அடுத்தபடியாக ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகையில் ஜியோ சினிமா பிரீமியம் கன்டென்ட்கள் எதிர்பார்க்க முடியாது. இந்த சலுகைகள் போக, ஜியோ அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா (Jio Unlimited Trur 5G Data) சலுகையை இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் வழங்குகிறது.
இந்த சலுகையை ஜியோ 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் ஏரியாக்களில் பெற்றுக் கொள்ள முடியும். அதோடு அந்த வாடிக்கையாளர் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் பெற்றவராக இருக்க வேண்டும். சொல்லப்போனால், ஜியோவில் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு 5ஜி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கும் திட்டத்துக்கும் சம்பந்தமில்லை. முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகளுடன் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் ஃபேமிலி சிம் கனெக்சன் சலுகைகள் வேண்டும் என்றால், ரூ 699 விலையில் கிடைக்கும் மற்றொரு போஸ்ட்பெஸ்ட் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது பார்ப்போம்.
ஜியோ ரூ 699 திட்ட விவரங்கள் (Jio Rs 699 Plan Details): இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அதோடு 100 ஜிபி லம்ப்சம் டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, உங்களுக்கு நளொன்றுக்கு 3.3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
இந்த டேட்டாவை பயன்படுத்திவிட்டால், அதன்பின்பு 1 ஜிபிக்கு ரூ 10 வசூலிக்கப்படும். இந்த திட்டத்தில் 3 ஃபேமலி சிம் கார்டுகளை இணைத்துக் கொள்ளாலாம். அதற்கு கூடுதலாக ரூ 99 கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி இணைக்கும் சிம் கார்டுக்கு 5 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படும். அதோடு வாய்ஸ் கால்களை செய்துகொள்ளலாம்.
இந்த திட்டத்தில் நெட்பிளிக்ஸ் பேஸிக் (Netflix Basic), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. அதோடு ஜியோசினிமா, ஜியோ டிவி, ஜியோகிளவுட் ஆப்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த போஸ்ட்பெஸ்ட் திட்டத்துக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








