அம்பானி ஆட்டம் ஆரம்பம்.. விலை குறைப்பு.. 4 பிளானில் நன்மை மாற்றம்.. Jio ரீசார்ஜ் செய்யும் முன் கவனியுங்க..
ஜியோ (Jio) வாடிக்கையாளர்களே கொஞ்சம் கவனியுங்க, உங்ககிட்ட ஜியோ சிம் கார்டு (Jio SIM card) இருக்கிறதா? அடிக்கடி ஜியோ ரீசார்ஜ் (Jio Recharge) செய்து வருகிறீர்களா? ஜியோ நிறுவனம் ஒரே நாளில் 4 திட்டங்களில் புதிய மாற்றங்களை (changes in 4 Jio Plans) நடைமுறைப்படுத்தியுள்ளது. பட்ஜெட் செக்மென்ட்டிற்குள் அதிக வாடிக்கையாளர்களால் ரீசார்ஜ் செய்யப்பட்ட முக்கியமான 4 திட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்களை தெரிந்துகொண்ட பிறகு , உங்களுடைய அடுத்த ரீசார்ஜ்ஜை மேற்கொள்வது உங்களுக்கு நல்லது மக்களே. சரி, எந்த 4 திட்டங்களில் ஜியோ மாற்றங்களை கொண்டுவந்துள்ளது என்று பார்க்கலாமா?
ஜியோ நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் கீழ் வழங்கி வந்த ஜியோ ரூ. 69 திட்டம் (Jio Rs 69 Plan), ஜியோ ரூ. 139 திட்டம் (Jio Rs 139 Plan), ஜியோ ரூ. 189 திட்டம் (Jio Rs 189 Plan) மாற்றம் ஜியோ ரூ. 448 திட்டம் (Jio Rs 448 Plan) ஆகிய திட்டங்களில் மாற்றங்களை அறிவித்துள்ளது.

1. ஜியோ ரூ. 69 திட்டம் (Jio Rs 69 Plan):
இந்த திட்டம் ஒரு ஜியோ டேட்டா ஆட்-ஆன் (Jio Data Add-On) திட்டமாகும். இந்த திட்டம் இதற்கு முன்பு உங்கள் அடிப்படை ரீசார்ஜ் வேலிடிட்டி நன்மையுடன் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இப்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மையை 7 நாட்களாக ஜியோ மாற்றியுள்ளது. இத்துடன் கிடைக்கும் டேட்டா நன்மையில் மாற்றங்கள் இல்லை. முன்பை போலவே அதே 6GB டேட்டா நன்மையை தான் இந்த திட்டம் வழங்குகிறது.
2. ஜியோ ரூ. 139 திட்டம் (Jio Rs 139 Plan):
ஜியோ ரூ. 69 திட்டத்தை போலவே செயல்பட்டுக் கொண்டிருந்த ஜியோ ரூ. 139 திட்டத்திலும் நிறுவனம் வேலிடிட்டி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இந்த திட்டம் 12GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி நன்மையையும் இப்போது 7 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த திட்டம் உங்கள் அடிப்படை ரீசார்ஜ் வேலிடிட்டியுடன் ஒத்துப்போகும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
3. ஜியோ ரூ. 189 திட்டம் (Jio Rs 189 Plan):
ஜியோ தளத்தில் இருந்து சில காலங்களுக்கு முன்பு நீக்கப்பட்ட இந்த ஜியோ ரூ. 189 திட்டம் இப்போது மீண்டும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மை, மொத்தமாக 2GB டேட்டா (data) மற்றும் மொத்தமாக 300 எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளை வழங்குகிறது. இலவச நன்மையாக JioTV, JioCinema மற்றும் JioColud சேவைகளை வழங்குகிறது.
4. ஜியோ ரூ. 445 திட்டம் (Jio Rs 445 Plan):
ஜியோ 448 திட்டமாக செயல்பட்டுக்கொண்டிருந்த திட்டத்தின் விலையை திடீரென 3 ரூபாய் குறைத்துள்ளது. ஜியோ ரூ. 448 திட்டம் இனி அதன் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ ரூ. 445 திட்டமாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இந்த திட்டம் 28 நாள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினசரி 2GB டேட்டா, தினமும் 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இத்துடன் Zee5, JioCinema Premium, SonyLIV, மற்றும் Lionsgate Play போன்ற இலவச OTT நன்மையையும் வழங்குகிறது.
இந்த 4 முக்கியமான திட்டங்களின் நன்மையை ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து நீங்கள் இந்த ரீசார்ஜ் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய முயன்றால், இவற்றின் நன்மைகள் மாற்றப்பட்டுள்ளன என்பதை அறிந்துகொண்டு ரீசார்ஜ் செய்வது சிறந்தது.


Click it and Unblock the Notifications








