Jio சிம் இருக்கா? இந்த 2 பிளான் நன்மை மாறிடுச்சு.. இனி கவனமா ரீசார்ஜ் பண்ணுங்க.. எந்த பிளான்னு உடனே பாருங்க..
ஜியோ (Jio) வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. சத்தமேயில்லாமல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 69 மற்றும் ரூ. 139 (Jio Rs 69 and Rs 139 Plan) ஆகிய அதன் இரண்டு டேட்டா பிளான் திட்டங்களின் நன்மையை மாற்றியுள்ளது. அவசர டேட்டா தேவைக்காக அதிகமான வாடிக்கையாளர்களால் ரீசார்ஜ் செய்யப்பட்டு வந்த இந்த இரண்டு முக்கியமான திட்டங்களின் நன்மைகளில் சில மாற்றங்களை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த திட்டங்களின் புதிய நன்மைகள் என்ன? இதை ஏன் ஜியோ சிம் வைத்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் கட்டாயம் கவனிக்க வேண்டும் என்பது இங்கே.
ஜியோ நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Jio prepaid plans) பயனர்களுக்காக பல திட்டங்களை வழங்கி வருகிறது. பல பிரிவுகளில் ஜியோ நிறுவனம் பல்வேறு விதமான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. உதாரணமான, ஜியோ தளத்தில், ஜியோ பாப்புலர் பிளான்ஸ் (Jio Popular Plans), ஜியோ ட்ரூ 5ஜி அன்லிமிடெட் பிளான்ஸ் (Jio True 5G Unlimited Plans) என்று பல பிரிவுகளின் கீழ் பல திட்டங்களை வழங்கி வருகிறது.

Jio சிம் இருக்கா? இந்த 2 பிளான் நன்மை மாறிடுச்சு.. உடனே கவனியுங்க மக்களே:
இப்படி ஜியோ நிறுவனம் அதன் டெலிகாம் தளத்தில் 18 வகையான பிரிவுகளின் (Jio 18 category plans) கீழ் தனித்தனி திட்டங்களை அதன் வாடிக்கையாளர்களுக்காக வழங்கி வருகிறது. இதில் ஜியோ சிம் கார்டு (Jio SIM card) வைத்துள்ள அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் ஒரு பொதுவான பிரிவாக செயல்படுவது தான் ஜியோவின் டேட்டா பேக்ஸ் பிரிவு. ஜியோ டேட்டா பேக்ஸ் பிரிவின் கீழ் நிறுவனம் 10 டேட்டா பேக்குகளை வழங்கி வருகிறது.
இதில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஜியோ ரூ. 69 திட்டம் மற்றும் ஜியோ ரூ. 139 திட்டம் ஆகிய இரண்டு டேட்டா பேக் (Jio data packs) திட்டங்களின் நன்மைகளில் ஜியோ நிறுவனம் தற்போது சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்பு வரை இந்த திட்டத்தை அவசர டேட்டா தேவைக்காக பல லட்சம் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய திட்டத்தின் நன்மைகளை ஜியோ இப்போது சத்தமில்லாமல் மாற்றி அமைத்துள்ளது.
ஜியோ ரூ. 69 திட்டம் (Jio Rs 69 Pack):
ஜியோ ரூ. 69 திட்டம் (Jio Rs 69 Pack), இந்த திட்டம் ஒரு டேட்டா ஒன்லி திட்டமாகும் (Data Only Plan). இந்த திட்டம் இதற்கு முன்பு, உங்கள் சிம் கார்டின் அடிப்படை ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டியுடன் (basic prepaid plan validity) ஒத்துப்போகும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது இதன் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் முன்பு 6GB டேட்டா நன்மையை (Jio 6GB data plan) வழங்கி வந்தது. இப்போதும் அதே அளவு டேட்டா நன்மையை தான் வழங்குகிறது என்றாலும், இதன் வேலிடிட்டி நன்மை 7 நாட்களாக தற்போது (7 days validity data pack) மாற்றப்பட்டுள்ளது. ஆம், இதற்கு முன்பு உங்கள் அடிப்படை திட்டம் 28 நாள் என்றால், இந்த டேட்டா பேக் செல்லுபடி 28 நாட்கள் வரை செல்லுபடியாகும் விதத்தில் ஜியோ வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ரூ. 139 திட்டம் (Jio Rs 139 Plan):
ஆனால், இன்று முதல் இந்த திட்டம் 7 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் செயல்படப்போகிறது. இதேபோல், ஜியோ வழங்கிய மற்றொரு டேட்டா ஒன்லி திட்டம் தான் ஜியோ ரூ. 139 திட்டம் (Jio Rs 139 Plan). இந்த திட்டமும் இதற்கு முன்பு உங்கள் அடிப்படை ரீசார்ஜ் வேலிடிட்டி உடன் செல்லுபடியாகும் விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
ஆனால் இப்போது, ஜியோ இந்த திட்டத்திற்கும் 7 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்க துவங்கியுள்ளது. இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு 12GB டேட்டா (Jio 12GB data plan) நன்மையை வழங்குகிறது. இனி இந்த டேட்டா பேக் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் வேலிடிட்டியை கவனித்து பயன்படுத்திக்கொள்ளும் படி அறிவுரைக்கப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications








