Jio அடிச்ச சிக்ஸர்.. 90 நாட்களுக்கு நாட் அவுட்.. 150GB டேட்டா.. இலவச IPL மேட்ச் 2024 சந்தா.. என்ன திட்டம்?
IPL கிரிக்கெட் ரசிகர்களை குஷி அடைய செய்யும் வகையில் ஜியோ (Jio) நிறுவனம் இப்போது 2 புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஆம், IPL போட்டிகளை எந்தவித தடையுமின்றி கண்டு மகிழ சிறப்பு IPL பிளான்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio): அதன் பயனர்களை கவர பல புதிய ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் மார்ச் 22, 2024 இல் தொடங்கவிருக்கும் IPL 2024 போட்டியை சிறப்பிக்கும் வகையில், ஜியோ நிறுவனம் இப்போது 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இது ரூ.667 விலையிலும் ரூ. 444 விலையிலும் வருகிறது.

ஜியோ IPL கிரிக்கெட் திட்டம்: தெரிந்தவர்களுக்கும், பழக்கமானவர்களுக்கும் இந்த 2 திட்டங்களும் மிகவும் பரிச்சீகரணமான திட்டமாக திகழும். காரணம், IPL கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் பொழுது, ஒவ்வொரு முறையும் ஜியோ நிறுவனம் இந்த 2 திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது. இது நம்ப முடியாத அளவு டேட்டா நன்மையை வழங்குகிறது. IPL போட்டியை தடையின்றி கண்டு மகிழ உங்களிடம் WiFi இணைப்பு இல்லை என்றால், இந்த திட்டங்கள் உங்களுக்கு சிறப்பானது.
Jio ரூ.667 மற்றும் ரூ.444 திட்டம்: இந்த 2 திட்டங்களை தேர்வு செய்வதன் மூலம் ஜியோ பயனர்கள் அளவில்லா டேட்டா நன்மையை பெறுவதோடு. IPL போட்டிகளை இலவச கண்டு மகிழ அனுமதிக்கும் ஜியோ சினிமா சந்தாவையும் இந்த திட்டங்கள் வழங்குகிறது. ரூ.667 திட்டம் மற்றும் ரூ.444 திட்டம் இரண்டும் டேட்டா ஒன்லி திட்டமாகும். இது வாய்ஸ் கால்ஸ் மற்றும் SMS நன்மைகளை வழங்காது.
ஜியோ ரூ.667 திட்டம்: வழங்கும் இந்த ரூ.667 கிரிக்கெட் டேட்டா IPL திட்டம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. முன்பே சொன்னது போல, இந்த திட்டம் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் SMS நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் 150GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த விலையில் இதுவொரு ஹெவி டேட்டா நன்மையாகும்.

ஜியோ ரூ.444 திட்டம்: மறுபுறம், நிறுவனம் வழங்கும் ரூ. 444 திட்டத்தை பற்றி பேசுகையில், இந்த திட்டம் 100GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் 60 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இதுவும் எந்தவித கூடுதல் நன்மைகளை வழங்காது. இதிலும் வாய்ஸ் கால் நன்மை மற்றும் SMS நன்மை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ மொபைல் நம்பர்: இந்த இரண்டு திட்டங்களில் ஏதேனும் ஒரு திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தாலும், உங்களிடம் அடிப்படை திட்டம் ஆக்டிவேட் நிலையில் இருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. ஆம், இந்த திட்டத்தை பயனப்டுத்த உங்கள் ஜியோ மொபைல் நம்பர் ஏதேனும் ஒரு அடிப்படை ரீசார்ஜ் திட்டத்தை கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ சினிமா (JioCinema): இத்துடன், ஜியோ நிறுவனம் இப்போது ஜியோ சினிமா (JioCinema) நன்மைகளை வழங்குகிறது. நடைபெறவிருக்கும் IPL 2024 தொடரை தடையில்லாமல் இலவசமாக கண்டு மகிழ நீங்கள் ஜியோசினிமா சந்தாவை இலவசமாக பெற்று ஆன்லைனில் IPL போட்டிகளை கண்டு மகிழலாம். IPL போட்டியை காண ஜியோ சினிமா பிரீமியம் சந்தா தேவையில்லை எனது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








