Home
News

இனிமே ஒரே ரீசார்ஜ்.. 70 நாளுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. 105 ஜிபி டேட்டா.. Jio கஸ்டமர்களுக்கு அடிச்சது லக்கு!

ஜியோ சிம் கார்டு (Jio SIM Card) வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு ஒரேவொரு ரீசார்ஜ் மூலம் 70 நாட்கள் வேலிடிட்டி (70 Days Validity) மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data) சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. 2 மாதங்களுக்கு மேலாகவும், 3 மாதங்களுக்கு உள்ளாகவும் ரீசார்ஜ் தேவைப்படும் கஸ்டமர்களுக்கு இதைவிட்டால் வேறு நல்ல ரீசார்ஜ் திட்டம் கிடைக்காது. இந்த ஜியோ 70 நாட்கள் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், இதற்கு இடையில் 70 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும்படி ஒரேவொரு ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) மட்டுமே இருக்கிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்காது, இருப்பினும், போஸ்ட் டேட்டாவுடன் தினசரி டேட்டா கொடுக்கப்படுகிறது.

இனிமே ஒரே ரீசார்ஜ்.. 70 நாளுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. 105 ஜிபி டேட்டா!

ஜியோ ரூ 666 திட்ட விவரங்கள் (Jio Rs 666 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 70 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. இன்டர்நெட் சலுகையை பார்க்கையில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.

இந்த போஸ்ட் டேட்டாவை (Post Data) 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டா 4ஜி வேகத்தில் மட்டுமே கிடைக்கும். ஏனென்றால், முன்பே சொன்னது போல இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்காது. 105 ஜிபிக்கா 4ஜி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம்.

டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா ஓடிடி ஆப்கள் இணைக்கப்பட்டுவிட்டதால், இதுவரையில் கிடைத்த ஜியோ சினிமா (Jio Cinema) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்காது. ஆகவே, ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆகியவற்றின் சந்தா மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதேபோல ஏர்டெல் (Airtel) நிறுவனத்திலும் ஒரு திட்டம் இருக்கிறது. ஆனால், கூடுதல் வேலிடிட்டி கொடுக்கிறது.

ஜியோ ரூ 799 திட்ட விவரங்கள் (Jio Rs 799 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் முந்தைய திட்டத்தைவிட கூடுதல் விலைக்கு கிடைப்பதால், வேலிடிட்டி சலுகைகள் கூடுதலாக கிடைக்கின்றன. ஆகவே, இந்த ஏர்டெல் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 77 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்கள் முழுவதும் முந்தைய திட்டத்தை போலவே 1.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது.

அதே நேரத்தில் அந்த 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படவில்லை. மற்ற சலுகைகளை பார்க்கையில், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் சலுகை 77 நாட்கள் முழுவதும் கிடைக்கிறது. முந்தைய திட்டத்தை போல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது.

இதற்கு அடுத்து ஏர்டெல் கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கும் ஸ்பேம் வாய்ஸ் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ் அலெர்ட் சலுகையை பேக் செய்கிறது. மற்றபடி வேறு எந்த சலுகைகளும் கிடைக்காது. 2 மாதங்களுக்கு மேலாகவும், 3 மாதங்களுக்கு உள்ளாகவும் ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், ஜியோ மற்றும் ஏர்டெல் கஸ்டமர்கள் இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 666 Plan With Unlimited Voice Calls 105GB Data 70 Days Validity Check More Than 2 Months Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X