இது புதுசு.. அப்போ 84 நாட்கள்.. இப்போ 70 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 105 ஜிபி டேட்டா.. ப்ரீபெய்ட் ரீசார்ஜ்!
ஜியோ கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி, 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்களுடன் கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது (Prepaid Plan), இப்போது 70 நாட்கள் வேலிடிட்டிக்கு மாறி இருக்கிறது. டேட்டா சலுகையிலும் கை வைக்கப்பட்டுள்ளது. இப்போது, ரீசார்ஜ் செய்தால் அந்த திட்டத்தில் என்ன சலுகைகள் கிடைக்கிறது? என்னென்ன சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளது? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
டெலிகாம் கட்டணம் உயர்வதற்கு முன்பு ஜியோ கஸ்டமர்களின் பேவரட்டாக ரூ 666 திட்டம் இருந்தது. இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) தொடங்கி வேலிடிட்டி (Validity), வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் தினசரி டேட்டா (Daily Data) போன்ற சலுகைகள் வாரி வழங்கப்பட்டன. ஆனால், இப்போது பல்வேறு சலுகைகள் குறைக்கப்பட்டுவிட்டன.

பழைய ஜியோ ரூ 666 திட்ட விவரங்கள் (Old Jio Rs 666 Plan Details): ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்வதற்கு முன்பு இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 84 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைத்தது. இந்த நாட்கள் முழுவதும் தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை வழங்கப்பட்டது. இதுபோக 1.5 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்பட்டது.
மேலும், வழக்கமாக கிடைக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்பட்டது. ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகைகளும் வந்தன. இப்போது, அப்படியே சலுகைகள் மாறிவிட்டன.
சொல்லப்போனால், மேற்கண்ட சலுகைகளை இப்போது பெற வேண்டுமானால், அந்த திட்டத்தில் விலை ரூ 799 ஆக இருக்கிறது. ஆகவே, ரூ 133 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே ரூ 666 விலைக்கும் திட்டம் இருக்கிறது. ஆனால், சலுகைகள் அப்படி இல்லை. ஆகவே. இப்போது ரூ 666 விலைக்கு கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை பார்ப்போம்.
புது ஜியோ ரூ 666 திட்ட விவரங்கள் (New Jio Rs 666 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 70 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் தினசரி டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டா சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை இதில் எதிர்பார்க்க முடியாது. தினசரி டேட்டாவை பார்க்கையில் 1.5 ஜிபி வருகிறது.
இந்த டேட்டாவுக்கு பிறகு முந்தைய திட்டத்தை போலவே 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பெற்று கொள்ளலாம். மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தை போலவே இருக்கும். ஆனால், ஜியோ சினிமா சந்தா மட்டும் கிடைக்காது. ஏனென்றால், இப்போது ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்கள் இணைக்கப்பட்டுவிட்டன.
ஆகவே, பிரத்யேக ஓடிடி திட்டங்களில் மட்டுமே ஜியோஹாட்ஸ்டார் கிடைக்கிறது. இதில் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் சந்தாவை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களையும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








