அம்பானிக்கு கும்பிடு.. அடுத்த 70 நாட்களுக்கு Jio ஒரே போடு.. 1.5 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!
ஜியோ (Jio) நிறுவனமானது, 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) ஒரு சிம் கார்டுக்கு தேவையான ஒட்டுமொத்த சலுகைகளையும் கொடுத்து இருக்கிறது. 2 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை மலிவாக பெற விரும்பினால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் ஓடிடி சந்தா மட்டும் கிடைக்காது. மற்ற எல்லா சலுகைகளும் இருக்கிறது.
நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கொடுக்கும் திட்டங்களில் கீழ் ஜியோ ரூ.666 திட்டம் (Jio Rs.666 Plan) ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த வேலிடிட்டிக்கு விலை கம்மியாக இருப்பதால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்காது. இருப்பினும், போஸ்ட் டேட்டா சலுகையுடன் தொடர்ந்து டேட்டா கொடுக்கப்படும். வாய்ஸ், எஸ்எம்எஸ் வழக்கம்போல கிடைக்கும்.

ஜியோ ரூ.666 திட்ட விவரங்கள் (Jio Rs 666 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 2 மாதங்களுக்கு மேல் 10 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் 1.5 ஜிபி டேட்டாவை தினமும் பயன்படுத்தி கொள்ளலாம். 70 நாட்களில் 105 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த 1.5 ஜிபி டேட்டாவை 4ஜி வேகத்தில் பயன்படுத்தலாம். ஆகவே, அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஓடிடி பிரியர்கள், ஆன்லைன் கேமிங் பிரியர்களுக்கு இந்த டேட்டா சரியாக இருக்காது. இருப்பினும், சோஷியல் மீடியா ஆப்கள், யூடியூப் போன்றவற்றுக்கு மலிவான விலைக்கு போதுமான டேட்டாவை பெற்று கொள்ளலாம்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் பெற்று கொள்ளலாம். தினமும் 100 எஸ்எம்எஸ்கள் அனுப்ப கிடைக்கிறது. வழக்கமாக கிடைக்கும், ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகையை இந்த திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் பிரீமியமாக இருக்காது.
இலவசமாக கிடைக்கும் கன்டென்ட்கள் மட்டுமே ஜியோ டிவி ஆப்பில் கிடைக்கும். அதேபோல ஜியோ ஏஐ கிளவுட் ஆப்பில் கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்காது. இந்த ஒட்டுமொத்த சலுகைகளும் போக ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவை இந்த திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். ரூ.35,100 மதிப்பில் இந்த சந்தாவின் சலுகைகள் இருக்கின்றன. ஆகவே, நானோ பனானா இருக்கிறது.
இமேஜ் ஜெனரேஷன் செய்து கொள்ளலாம். மேலும், வீடியோ ஜெனரேஷன் உள்ளிட்ட பிரீமியம் அணுகல்களும் கிடைக்கிறது. 5000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் இந்த சந்தாவில் கிடைக்கும். 18 மாதங்களுக்கு இந்த ஜெமினி ப்ரோ சந்தா கிடைக்கும். இதை தொடர்ந்து பெற ஒரு ரீசார்ஜ் முடிந்தவுடன் குறைந்தபட்சம் ரூ.299 விலையிலான திட்டத்தை அடுத்த திட்டமாக ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இதைவிட கம்மியான விலைக்கு மற்றொரு திட்டம் இருக்கிறது. ஆனால், 56 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கும்படி இருக்கிறது. இதுவும் 1.5 ஜிபி டேட்டா திட்டங்களின் கீழ் கிடைக்கிறது. முதலில் பார்த்த திட்டத்தில் கிடைத்த அதே சலுகைகள் இதிலும் கிடைக்கும். ஆனால், வேலிடிட்டி மட்டும் குறைவாக கிடைக்கும். ஆகவே, மொத்தமாக டேட்டாவும் குறையும்.
ஜியோ ரூ.579 திட்ட விவரங்கள் (Jio Rs.579 Plan Details): 56 நாட்கள் வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி, ஜியோ கிளவுட் கிடைக்கிறது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் ஜெமினி ப்ரோ சந்தா கிடைக்கிறது. இதிலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்காது.


Click it and Unblock the Notifications