Home
News

Jio SIM கார்டு இருக்கா.. அடுத்த 70 நாட்களுக்கு இதுதான் ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 105 ஜிபி டேட்டா!

ஜியோ (Jio) சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மலிவான விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ்கள் வேண்டுமானால், இப்போது பார்க்க இருக்கும் திட்டத்தை கண்ணை மூடி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தின் (Jio Prepaid Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஒரு மாதம், 2 மாதம் வேலிடிட்டி வேண்டாம் அதேபோல 3 மாதங்களுக்கும் வேலிடிட்டி வேண்டாம், இதற்கு இடையில் ஏதாவது வேலிடிட்டி கொண்ட திட்டம் உள்ளதா என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஜியோ ரூ.666 திட்டம் பக்கா தேர்வாக இருக்கும். இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்காது.

Jio SIM கார்டு இருக்கா.. அடுத்த 70 நாட்களுக்கு இதுதான் ரீசார்ஜ்!

ஜியோ ரூ.666 திட்ட விவரங்கள் (Jio Rs 666 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 70 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த வேலிடிட்டி முழுவதும் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். ஆகவே, மொத்தமாக 105 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். இதுபோக 64 கேபிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும் போஸ்ட் டேட்டாவும் வருகிறது.

இதை 1.5 ஜிபி டேட்டா முடிந்த பிறகு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டம் மலிவான விலைக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படவில்லை. இருப்பினும், அன்லிமிடெட் 5ஜி அப்கிரேட் கொடுக்கிறது. ஆகவே, ரூ.51 முதல் 5ஜி அப்கிரேட் திட்டங்களை இதில் சேர்த்து கொள்ளலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன.

ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் கொடுக்கப்படும். மேலும், ஜியோ ஸ்பெஷல் ஆஃபர் (Jio Special Offer) சலுகைகளும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கிடைக்கும்.

இதை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 70 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைப்பதால், இது முடிந்தவுடன் அடுத்த ரீசார்ஜை 48 மணி நேரத்துக்கு செய்தால், ஓடிடி சந்தாவை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், 18 மாதங்களுக்கு ஜெமினி ப்ரோ திட்டம் (Gemini Pro Plan) கொடுக்கப்படுகிறது. ரூ.35,100 மதிப்பில் கொடுக்கப்படுகிறது.

இந்த சந்தாவில் 5000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. நானோ பனானா அணுகல் கொடுக்கப்படுகிறது. இதைவிட கூடுதல் வேலிடிட்டி தேவைப்பட்டால், ஜியோ ரூ.889 திட்டத்துக்கு கஸ்டமர்கள் செல்லலாம். இதில் 84 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். முந்தைய திட்டத்தில் பார்த்த அதே சலுகைகள் இந்த திட்டத்துக்கும் கொடுக்கப்படும்.

ஜியோ ரூ.889 திட்ட விவரங்கள் (Jio Rs 889 Plan Details): 84 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மேலும், 18 மாதங்களுக்கு ஜெமினி ப்ரோ திட்டம் கிடைக்கும். 3 மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கொடுக்கப்படும். இந்த திட்டங்களை ஜியோ நிறுவனத்தின் 1.5 ஜிபி டேட்டா திட்டங்களின் கீழ் ரீசார்ஜ் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 666 Plan With 70 Days Validity 105 GB Data Unlimited Voice Calls Check 1.5 GB Per Day Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X