Home
News

Jio-வின் பட்டைய கிளப்பும் 70 நாள் திட்டம்.. தினசரி 9 ரூபாய் செலவில் அமோக நன்மை.. எந்த திட்டம்? என்ன விலை?

ஜியோ (Jio) நிறுவனம் 6 மாதங்களுக்கு முன்பு தனது ப்ரீபெய்ட் (prepaid) மற்றும் போஸ்ட்பைட் ரீசார்ஜ் திட்டங்களின் (postpaid recharge plans) விலையை அதிகரித்தது. கடுமையான விலை ஏற்றத்தை எதிர்க்கும் விதமாக ஜியோ நெட்வொர்க்குள் (Jio network) இருந்து 1 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க்கிற்கு மாறிவிட்டனர். இவர்கள் மீண்டும் ஜியோ பக்கம் இழுக்கும் விதமாக, ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) தற்போது மலிவு விலையில் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் (70 days validity plan) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ திட்டங்களின் விலை ஏற்றத்திற்கு பிறகு, ஜியோ வாடிக்கையாளர்கள் பலர் அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் பக்கம் மாற துவங்கிவிட்டனர். இந்தியாவை பொறுத்த வரை, தற்போது மிகமிக குறைந்த விலையில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) மட்டுமே சிறந்த திட்டங்களை அதிக வேலிடிட்டி மற்றும் நன்மையுடன் வழங்கி வருகின்றன.

Jio-வின் பட்டைய கிளப்பும் 70 நாள் திட்டம்.. தினசரி 9 ரூபாய் அமோக நன்மை

Jio-வின் பட்டைய கிளப்பும் 70 நாள் திட்டம்:

BSNL 4G சேவையும் இப்போது ஆங்காங்கே கிடைப்பதனால் மக்கள் BSNL நோக்கி படையெடுத்து வருகின்றனர். BSNL நோக்கி நகரும் வாடிக்கையாளர்களை தனது வசம் இழுக்கும் விதமாக ஜியோ நிறுவனம் புதிய ஜியோ ரூ. 666 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

ஜியோவின் இந்த ஜியோ 666 பிளான் (Jio 666 Plan) திட்டம் இதன் விலைக்கு அதிகமான நன்மைகளை வழங்குகிறது என்று ஜியோவால் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் 70 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை (unlimited voice calls) வழங்குகிறது. இதில் லோக்கல் (local), STD மற்றும் ரோமிங் அழைப்பு சேவைகள் (roaming) அனைத்தையும் 70 நாட்களுக்கு அன்லிமிடெட் ஆக வழங்கியுள்ளது.

ஜியோ 666 பிளான் (Jio 666 Plan):

இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் (Jio prepaid திட்டம்) தினசரி 1.5GB டேட்டா (data) நன்மையை வழங்குகிறது. இதன் மூலம் இந்த திட்டத்தின் பயனர்கள் மொத்தமாக 105GB டேட்டா நன்மையை அனுபவிக்க முடியும். இந்த ஜியோ 666 திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது. இந்த மொத்த நன்மைகளையும் வாடிக்கையாளர்கள் 70 நாட்களுக்கு தடையின்றி அனுபவித்துக்கொள்ளலாம்.

இத்துடன் ஜியோ இலவசமாக வழங்கும் ஜியோ ரிவார்ட் நன்மைகளும் இந்த திட்டத்துடன் கிடைக்கிறது. ஜியோ நிறுவனம் இந்த திட்டத்தின் பயனர்களுக்கு இலவசமாக ஜியோ டிவி (Jio TV) சந்தா, ஜியோ சினிமா (Jio Cinema) சந்தா மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) நன்மை ஆகியவற்றை இலவசமாக வழங்குகிறது. இந்த திட்டத்தின் தினசரி கட்டணமாக நீங்கள் வெறும் ரூ.9 செலவிட வேண்டியதிருக்கும்.

பிஎஸ்என்எல் 197 திட்டம் (BSNL 197 Plan):

BSNL நிறுவனம் அறிமுகம் செய்த 70 நாள் திட்டம் BSNL 197 Plan என்று 197 ரூபாய் விலையில் வருகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினசரி 2GB டேட்டா, தினசரி 100 SMS ஆகியவற்றை முதல் 18 நாட்களுக்கு மட்டும் வழங்குகிறது. BSNL சிம்மை ஆக்டிவ் (SIM activate) நிலையில் வைத்துக்கொள்ள மற்றும் இன்கம்மிங் நன்மையை முழுமையாக அனுபவிக்க 70 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை நிறுவனம் வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 666 Plan For 70 Days Validity Provides Unlimited Voice Data and SMS Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X