Home
News

அதான் அம்பானி.. 70 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. 1.5 ஜிபி டேட்டா.. 2 மாசத்துக்கு மேல ரூ.666-க்கு திட்டம்!

ஜியோ (Jio) நிறுவனத்தில் 2 மாதங்களுக்கு மேலாகவும், 3 மாதங்களுக்கு உள்ளாகவும் ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) வேண்டுமானால், அவர்களுக்கு 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஒரு திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கின்றன. மலிவான விலைக்கு கிடைப்பதால், ஒரேவொரு முக்கிய சலுகை மட்டும் இதில் கிடைக்காது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ.666 திட்ட விவரங்கள் (Jio Rs 666 Plan Details): இந்த திட்டமானது, 1.5 ஜிபி டேட்டா திட்டங்களின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஆகவே, இதை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படும். ஆகவே, 70 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைப்பதால் மொத்தமாக 105 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம்.

அதான் அம்பானி.. 70 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. 1.5 ஜிபி டேட்டா!

இதுபோக 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை (Post Data) இந்த திட்டம் கொடுக்கிறது. இதை தினசரிக்கு ஒதுக்கப்படும் 1.5 ஜிபி டேட்டா முடிந்த பிறகு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டம் 70 நாட்கள் வேலிடிட்டி கொடுத்தாலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை இதில் கொடுக்கப்படவில்லை.

இருப்பினும், 5ஜி அப்கிரேட் திட்டங்கள் இதற்கு பொருந்துகிறது. ஆகவே, உங்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா தேவைப்படும்பட்சத்தில் ரூ.101 மதிப்பிலான ட்ரூ அன்லிமிடெட் அப்கிரேட் (True Unlimited Upgrade) திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதில் 6 ஜிபிக்கான டேட்டா 4ஜி வேகத்தில் கொடுக்கப்படும்.

அதே நேரத்தில் ஆக்டிவ் திட்டத்தின் வேலிடிட்டி வரையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுக்கும். இந்த சலுகைகளுக்கு அடுத்து அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி எஸ்எம்எஸ்கள் (Daily SMS) மற்றும் ஜியோ ஆப்களின் (Jio Apps) சலுகை கிடைக்கிறது. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் கால்களை செய்யலாம்.

அதேபோல அன்லிமிடெட் எஸ்டிடி (Unlimited STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகள் கொடுக்கப்படுகிறது. தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களும் கஸ்டமர்களுக்கு அனுப்ப கிடைக்கிறது. ஜியோ ஆப்களின் சலுகையை பார்க்கையில், ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை கிடைக்கிறது.

இந்த திட்டத்துக்கு ரூ.100 மதிப்பிலான டேட்டா + ஓடிடி சலுகைகளை கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலமாக 2 சதவீத கூடுதல் கோல்டு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கும். இது லிமிடெட் ப்ரீயட் சலுகையாக இருக்கிறது. ஆகவே, இதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இதுவரை பார்த்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு மீண்டும் டேட்டா திட்டங்களின் கீழ் கிடைக்கும் ரூ.100 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 5 ஜிபி டேட்டா மற்றும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த சந்தாவை 30 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல 5 ஜிபி டேட்டாவுக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி வருகிறது.

இந்த சலுகைகள் போக ஜியோ கோல்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு கூடுதலாக 2 சதவீத கோல்டு கொடுக்கப்படுகிறது. இது ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலம் டிஜிட்டல் கோல்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு கிடைக்கும். மேலும், ஜியோஹோம் 2 மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும். அஜியோ, ரிலையன்ஸ் டிஜிட்டலிலும் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 666 Plan 70 Days Validity Unlimited Voice Calls 105GB Data Check More Than Two Months Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X