மறுபடியும் FREE.. FREE.. உடனே இதை பண்ணுங்க.. அன்லிமிடெட் 4G டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. 3 மாத ஓடிடி சந்தா!
ஜியோ கஸ்டமர்களுக்கு ஆரம்பத்தில் கிடைத்ததை போலவே இப்போது அன்லிமிடெட் 4ஜி டேட்டா இலவமாக கிடைத்துள்ளது. ஜியோ ரூ.649 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் (Postpaid Plan) இந்த சலுகை கிடைக்கிறது. மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் 3 மாதங்களுக்கு ஓடிடி சந்தாவும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ நிறுவனத்தின் 4ஜி சேவைகள் தொடங்கப்பட்டபோது, தினசரி லிமிட் இல்லாமல் டேட்டா கொடுக்கப்பட்டது. பிறகு நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா, 2 ஜிபி டேட்டா, 2.5 ஜிபி டேட்டா போன்ற நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, மீண்டும் போஸ்பெய்ட் திட்டங்களில் அன்லிமிடெட் 4ஜி டேட்டா (Unlimited 4G Data) சலுகையை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் ரூ.649 திட்டம் அதிகமாக பெறப்படுகிறது.

ஜியோ ரூ. 649 போஸ்ட்பெய்ட் திட்ட விவரங்கள் (Jio Rs 649 Postpaid Plan Details): பிரைமரி சிம் கார்டுக்கு மட்டுமே இந்த திட்டத்தில் சலுகைகள் கிடைக்கும். ஆகவே, ஃபேமிலி சிம் கார்டுகளை ஆட் செய்ய முடியாது. அன்லிமிடெட் 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுக்கிறது. ஆகவே, 4ஜி கஸ்டமர்களாக இருந்தாலும் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.
5ஜி கஸ்டமர்களாக இருந்தாலும் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். தினசரிக்கு எந்த லிமிட்டும் இல்லாமல், டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி ரோமிங் கால்களும் (Unlimited Local, STD Roaming Calls) இந்த திட்டத்துக்கு கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடியும். மேலும், கூடுதல் சலுகைகளை கொடுத்து உள்ளது.
ஆகவே, ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி சந்தாவை மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். மொபைல் மற்றும் டிவி சந்தாவாக இது இருக்கிறது. ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை வழியாக 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டு உள்ளது. லேட்டஸ்ட் சலுகையாக சேர்க்கப்பட்ட ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவை இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுத்துள்ளது.
இதைவிட மலிவான விலைக்கு போஸ்ட்பெய்ட் திட்டம் வேண்டுமானால், ஜியோ ரூ.349 போஸ்ட்பெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆனால், இதில் அன்லிமிடெட் 4ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படாது. லம்ப்-சம் டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கும். மற்ற சலுகைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கிறது. இந்த ஆரம்ப விலை போஸ்ட்பெய்ட் திட்டத்தின் சலுகைகளை பார்க்கலாம்.
ஜியோ ரூ. 349 போஸ்ட்பெய்ட் திட்ட விவரங்கள் (Jio Rs 349 Postpaid Plan Details): இந்த திட்டத்திலும் பிரைமரி சிம் கார்டுக்கு மட்டுமே சலுகைகள் கிடைக்கும். பில் சைக்கிள்களுக்கு 30 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டா சலுகை போக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை இந்த திட்டமும் கொடுத்துள்ளது.
மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது. 3 மாதங்களுக்கு மொபைல் மற்றும் டிவியில் பயன்படுத்தும்படி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சந்தா கிடைக்கிறது. ஜியோ ஏஐ கிளவுட் சலுகை மற்றும் ஜெமினி ப்ரோ சந்தா கிடைக்கிறது. இதில் ஓடிடி மற்றும் ஜெமினி ப்ரோ சந்தாவை தொடர்ந்து பெறுவதற்கு திட்டத்தை தொடர்ந்து அடுத்தடுத்த பில் சைக்கிளை கிளியர் செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications








