Jio சிம் இருக்கா? வரப்போகும் 56 நாட்கள்.. 112 ஜிபி டேட்டா... வாய்ஸ் கால்கள்.. 3 மாதங்களுக்கு ஓடிடி!
ஜியோ (Jio) நிறுவனத்தின் சிம் கார்டு வைத்து இருக்கும் கஸ்டமர்கள் 56 நாட்கள் வேலிடிட்டி (56 Days Validity) கொண்ட திட்டங்களில் எதை ரீசார்ஜ் செய்யலாம் என்பதை தேடிக் கொண்டிருந்தால், இப்போது பார்க்க இருக்கும் திட்டத்துக்கு செல்லலாம். இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
56 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் மற்றும் 3 மாதங்களுக்கு ஓடிடி சந்தாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. மேலும், 18 மாதங்களுக்கு ஜெமினி ப்ரோ சந்தாவும் (Gemini Pro) கிடைக்கும். இதுபோக கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கும்.

ஜியோ ரூ. 629 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 629 Prepaid Plan): அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) 56 நாட்கள் முழுவதும் செய்து கொள்ளலாம். 100 எஸ்எம்எஸ்களை தினசரிக்கு அனுப்பி கொள்ளலாம். மேலும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, மொத்தமாக 112 ஜிபி டேட்டா கிடைக்கும்.
2 ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா குறைக்கப்படும். இருப்பினும், தொடர்ந்து டேட்டா கிடைக்கும். இந்த டேட்டா சலுகைகள் போக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதற்கு கஸ்டமர்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும். அதேபோல ஜியோ வெல்கம் ஆஃபரை பெற வேண்டும்.
இந்த அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை முற்றிலும் இலவமாக பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, 4ஜி வேகத்தில் கொடுக்கப்படும் 2 ஜிபி டேட்டாவுக்கும் இதற்கும் தொடர்பில்லை. அது தனியாகவும், இந்த அன்லிமிடெட் 5ஜி டேட்டா தனியாகவும் கொடுக்கப்படும். ஆகவே, டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் எந்தவித குறையும் இருக்காது.
இப்போது, மற்ற சலுகைகளுக்கு வரலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 3 மாதங்களுக்கு ஓடிடி சந்தா கிடைக்கும். அதுவும் ஜியோ நிறுவனத்தின் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவாக இருக்கிறது. மொபைல் மற்றும் டிவிகளில் இந்த சந்தாவை பயன்படுத்தலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை 56 நாட்கள் வரையில் பெறலாம். ஆனால், இந்த ஓடிடிக்கு 3 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கும்.
ஆகவே, 56 நாட்கள் வேலிடிட்டி முடிந்தவுடன் அடுத்த 48 மணி நேரத்துக்குள் அடுத்த ரீசார்ஜை செய்தால், ஓடிடி சந்தா தொடர்ந்து, ஆக்டிவில் இருக்கும். ஜியோ மொபைல் நம்பருக்கு மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தா கிடைக்கிறது. இந்த சந்தா வழியாக 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படும்.
ஜியோ கிளவுட் ஆப் வழியாக இந்த ஸ்டோரேஜை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஜியோ டிவி (Jio TV) சலுகையும் கிடைக்கும். 18 மாதங்களுக்கு இலவமாக கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவை பெறலாம், குறைந்தபட்சம் ரூ.349 திட்டத்தை ரீசார்ஜ் செய்து, இந்த 18 மாதங்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் 2000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளது. நானோ பனானா கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








