Home
News

இது போதும் அம்பானி சார்.. ரூ.629 போதும்.. 18 மாதங்களுக்கு சந்தா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!

ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு 56 நாட்கள் வேலிடிட்டியில் 2 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஓடிடி சந்தா கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் 18 மாதங்களுக்கான ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கிடைக்கிறது. இதுபோக டிஜிட்டல் கோல்டு, ஜியோஹோம் மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற சலுகைகள் கிடைக்கின்றன. இந்த 56 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ் சலுகைகளுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இந்த வழக்கமான சலுகைகள் போக ஜியோ ஃபெஸ்டிவ் ஆஃபரின் கீழ் டிஜிட்டல் கோல்டு, ஜியோஹோம், கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் ஓடிடி சந்தா கொடுக்கப்படுகிறது. இதுபோக ஜெமினி ப்ரோ சந்தா கொடுக்கப்படுகிறது.

இது போதும் அம்பானி சார்.. ரூ.629 போதும்.. 18 மாதங்களுக்கு சந்தா!

ஜியோ ரூ 629 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 629 Prepaid Plan): இந்த திட்டத்துக்கு 56 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் தினமும் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டா போக 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகைகள் கொடுக்கப்படுகிறது. ஆகவே, டேட்டாவுக்கு குறையில்லை.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். மற்ற திட்டங்களுக்கு கிடைப்பதை போல இதிலும் ஜியோ டிவி (Jio TV) சலுகை கொடுக்கப்படும். இந்த சலுகைகள் ஆரம்பத்தில் இருந்தே கொடுக்கப்படுகிறது. இப்போது, கூடுதலாக பெஸ்டிவ் சலுகைகள் கிடைக்கின்றன.

என்னென்ன பெஸ்டிவ் சலுகைகள்? இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு 91-8010000524 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்து, டிஜிட்டல் கோல்டு சலுகையை பெற்று கொள்ளலாம். ஆனால், இந்த டிஜிட்டல் கோல்டு ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலமாக மட்டுமே வாங்கப்பட வேண்டும். அப்படி வாங்கும்போது, கூடுதலாக 2 சதவீத கோல்டு கஸ்டமர்களுக்கு கிடைக்கும்.

ஓடிடி சந்தா, லைவ் டிவி சேனல்கள் மற்றும் வை-பை டேட்டா சலுகைகளுடன் கிடைக்கும் ஜியோஹோம் (JioHome) சந்தாவானது, 2 மாதங்களுக்கு கொடுக்கப்படுகிறது. இது முற்றிலும் இலவமாக கொடுக்கப்படும் சந்தாவாக இருக்கிறது. இதுபோக ஸ்மார்ட்போனில் பயன்படுத்தி கொள்ளும்படி ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது.

இந்த சலுகைகள் மட்டுமல்லாமல், 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இதை ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) மூலமாக பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகள் போக ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கொடுக்கப்படுகிறது. இதை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இது 18 வயது மற்றும் அதற்கு மேல் இருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் கிடைக்கிறது.

இந்த சந்தாவை தனியாக பெற வேண்டுமானால், ரூ.35,100 செலவு செய்ய வேண்டும். மேலும், இந்த திட்டத்துக்கு 56 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, சலுகைகளை தொடர்ந்து பெறுவதற்கு அடுத்தடுத்த ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை 90 நாட்கள் முழுவதும் பெறுவதற்கு அடுத்த ரீசார்ஜ் 48 மணி நேரத்துக்குள் செய்ய வேண்டும்.

இல்லையென்றால், தொடர்ந்து ஜியோஹாட்ஸ்டார் கிடைக்காது. ஆனால், ஜெமினி ப்ரோ சலுகை அப்படி கிடையாது. உங்களிடம் டேட்டா இருந்தால் போதும் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம். 18 மாதங்களுக்கு கிடைப்பதால், ரீசார்ஜ் செய்ய செய்ய பயன்படுத்தி கொள்ளலாம். இப்படியான அதிகபட்ச சலுகைகள் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 629 Prepaid Plan 56 Days Validity Unlimited Voice Free 18 Month Google Gemini Pro Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X