Home
News

ஒரே Jio ரீசார்ஜ்.. 56 நாட்கள் அன்லிமிடெட் வாய்ஸ்.. 90 நாட்கள் ஓடிடி சந்தா.. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) கஸ்டமர்களுக்கு 56 நாட்கள் வேலிடிட்டியில் பெஸ்ட் ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) வேண்டுமானால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 5ஜி டேட்டாவுடன் கிடைக்கும்படி ஒரு திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக பிரீமியம் ஓடிடி சந்தாவும் (OTT Subscription) சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை பார்த்துவிட்டு, ரீசார்ஜ் செய்வதை பற்றி கஸ்டமர்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்.

ஜியோ கஸ்டமர்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான டெலிகாம் கஸ்டமர்களும் 2 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்வதையே வாடிக்கையாக வைத்து வருகின்றன. ஆனால், டெலிகாம் நிறுவனங்களை பொறுத்தவரையில் 2 மாதங்கள் என்பது 56 நாட்கள் மட்டுமே. ஆகவே, இதில் எந்த திட்டம் பெஸ்ட் என்பதை தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது.

ஒரே Jio ரீசார்ஜ்.. 56 நாட்கள் அன்லிமிடெட் வாய்ஸ்.. 90 நாட்கள் ஓடிடி!

ஜியோ ரூ 629 திட்ட விவரங்கள் (Jio Rs 629 Plan Details): ஜியோ கஸ்டமர்களுக்கு டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகள் 56 நாட்களுக்கு குறையில்லாமல் இருக்க வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஏனென்றால், தினசரி டேட்டாவும், போஸ்ட் டேட்டாவும் போக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் (Unlimited 5G Data) கிடைக்கிறது.

ஆகவே, 56 நாட்கள் முழுவதும் டேட்டாவுக்கு துளியும் குறையிருக்காது. அதேபோல ஓடிடி சலுகையை பார்க்கையில், புதிதாக சேர்க்கப்பட்ட ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா இதில் கிடைக்கிறது. இந்த சந்தா லிமிடெட் பிரீயட் ஆஃபராக இருக்கிறது. இப்போது முழு சலுகைகளை தெரிந்து கொள்வோம். இதில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

இதன் மூலம் 56 நாட்களுக்கு 112 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். இருப்பினும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைப்பதால், அதை பெறும் கஸ்டமர்களுக்கு லிமிட் இல்லாமல் டேட்டா சலுகை கிடைக்கும். ஒருவேளை நாளொன்றுக்கு ஒதுக்கப்பட்ட 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி முடித்துவிட்டாலும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கிறது.

ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை பொறுத்தவரையில் 90 நாட்களுக்கு கிடைக்கும். ஆனால், இந்த திட்டத்துக்கு 56 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைப்பதால், தொடர்ந்து ஹாட்ஸ்டார் சந்தாவை பெறுவதற்கு அடுத்த ரீசார்ஜ் ஆனது உடனடியாக செய்யப்பட வேண்டும். அதாவது 56 நாட்கள் வேலிடிட்டி முடிந்தவுடன் அடுத்த 48 மணி நேரத்துக்குள் புதிய ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

அப்படி செய்யும்பட்சத்தில் ஜியோஹாட்ஸ்டார் சந்தா தொடர்ந்து கிடைக்கும். இப்போது மற்ற சலுகைகளுக்கு வருவோம். டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகளை போலவே வாய்ஸ் கால்களும் குறையில்லாமல் கிடைக்கிறது. அதாவது, 56 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் சலுகையில் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Call) செய்து கொள்ளலாம்.

இந்த ஜியோ ரூ 629 ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. பிரீமியம் அல்லாமல் இலவச கன்டென்ட்களை கொடுக்கும் ஜியோ டிவி (Jio TV) சந்தாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். மேலும், ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. ஆகவே, ஒட்டுமொத்தமாகவே இந்த திட்டம் நல்ல சலுகைகளையே கொடுக்கிறது.

சொல்லப்போனால், 2 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்களில் 56 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் ஒரே திட்டமாக இது இருக்கிறது. இதற்கு மேல் 70 நாட்கள் அல்லது 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தையே கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். அதிலும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 90 நாட்கள் ஓடிடி, அன்லிமிடெட் வாய்ஸ், 100 எஸ்எம்எஸ் சலுகைகள் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 629 Plan With Unlimited Voice Calls 56 Days Validity Check 2GB Data Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X