கொடுத்தாரு பாரு அம்பானி.. 56 நாட்களுக்கு வாரி வழங்கியாச்சு.. FREE-ஆக 2 மாசம்.. வாய்ஸ் கால்கள்.. 112GB டேட்டா!
ஒரேவொரு ப்ரீபெய்ட் திட்டத்தில் 56 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், இலவசமாக 2 மாதங்களுக்கு ஜியோஹோம் ட்ரையல், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ஜியோ நிறுவனம் கொடுக்கிறது. மேலும், டிஜிட்டல் கோல்டு, கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற சலுகைகளையும் இது வைத்திருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
ஜியோ ரூ.629 திட்ட விவரங்கள் (Jio Rs 629 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு 56 நாட்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது. இதுபோக தினசரிக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த தினசரி டேட்டாவை மட்டும் 4ஜி வேகத்தில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, 4ஜி வேகத்தில் மட்டும் 112 ஜிபி டேட்டாவும், அது இல்லாமல் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited 5G Data), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) ஜியோ கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோ டிவி (JioTV) சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது.
இந்த சலுகைகளை 56 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இது மட்டுமே திட்டத்தின் சலுகையாகும். ஆனால், இப்போது ஜியோ நிறுவனத்தின் 9ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு சில சலுகைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இது ரூ.629 விலையைவிட பல மடங்கு அதிக சலுகைகளை கொடுக்கிறது. அதுவும், முற்றிலும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. என்னென்ன சலுகைகள்?
இந்த சலுகையின் கீழ் 3 மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை பெற்று கொள்ளலாம். அதேபோல ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்கள் சலுகைகளுடன் வை-பை டேட்டா சலுகையையும் கொடுக்கும் ஜியோஹோம் (JioHome) சலுகையை 2 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், இது புது கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
மேலும், 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இதை ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) மூலம் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) சந்தாவை 1 மாதத்துக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ரிலையன்ஸ் டிஜிட்டலில் (Reliance Digital) ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு அதிகபட்சம் ரூ.399 சலுகை கொடுக்கப்படுகிறது.
ஆனால், இது குறிப்பிட்ட பொருட்களை ஆர்டர் செய்யும்போது மட்டுமே கிடைக்கும். மேலும், அஜியோ (Ajio) தளத்தில் ஆர்டர் செய்தாலும், ரூ.200 ஆஃபர் கொடுக்கப்படுகிறது. ஆனால், இதற்கு ரூ.1,000 மதிப்பில் ஆர்டர் செய்ய வேண்டும். இந்த ஜியோ சலுகைகள் போக மற்ற நிறுவனங்களின் சலுகைகளும் இதில் கிடைக்கின்றன. ஆகவே, ஈஸ்மைட்ரிப் (EaseMyTrip) டிக்கெட் புக்கிங்கில் ரூ.2,220 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
அதேபோல ஹோட்டல்களை புக்கிங் செய்யும்போது 15 சதவீத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. நெட்மெட்ஸ் ஃபர்ஸ்ட் மெம்பர்ஷிப் சலுகையும் இதில் கொடுக்கப்படுகிறது. இப்படி ஒட்டுமொத்தமாக சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது. மைஜியோ மற்றும் ஜியோ வெப்சைட் மூலம் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடியும். இந்த விலைக்கு அதிக சலுகைகள் கிடைக்கிறது.
இந்த ஜியோ 9ஆவது ஆண்டுவிழா சலுகைகள் பல்வேறு திட்டங்களில் கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், 56 நாட்கள், 84 நாட்கள், 365 நாட்கள் போன்ற பல்வேறு வேலிடிட்டி கொண்ட திட்டங்களுக்கும் கொடுக்கப்படுகிறது. உங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப திட்டங்களை வைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications