அறக்க பறக்க ரீசார்ஜ்.. அடுத்த 56 நாட்களுக்கு வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 112 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!
ஜியோ (Jio) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களாக இருப்போருக்கு 2 மாதங்களுக்கு பெஸ்ட் திட்டம் வேண்டுமானால், இப்போது பார்க்க இருக்கும் திட்டத்துக்கு தாராளமாக செல்லலாம். இதில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற வழக்கமான சலுகைகள் மட்டுமல்லாமல், கூடுதலாக பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன.
டெலிகாம் நிறுவனங்களை பொறுத்தவரையில், 1 மாதம் என்றால் 28 நாட்களாகவே இருக்கிறது. ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 2 மாதங்கள் வேலிடிட்டி என்றால், 60 நாட்கள் அல்லது 61 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம். 56 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், சலுகைகள் விலைக்கு ஏற்ப இருக்கும்.

ஜியோ ரூ.629 திட்ட விவரங்கள் (Jio Rs 629 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 56 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
அன்லிமிடெட் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள் இருக்கும் கஸ்டமர்கள் மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். ஒருவேளை 4ஜி கஸ்டமர்களாக இருந்தால், வழக்கமாக கிடைக்கும் 4ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை இந்த ஜியோ ரூ.629 திட்டத்தில் பெறலாம்.
இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். 56 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் கஸ்டமர்கள் 112 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த சலுகைகள் போக ஜியோ ஸ்பெஷல் ஆஃபர் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோஹாஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால், இதை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்கும் 56 நாட்கள் வேலிடிட்டி முடிந்த பிறகு அடுத்த 48 மணி நேரத்துக்கு மீண்டும் ரீசார்ஜ் செய்தால் போதும், இந்த ஓடிடி சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகையுடன் 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் சலுகையும் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.
இதை ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆப் வழியாக பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ கிளவுட் சலுகைகளை பயன்படுத்தி கொள்ள ரீசார்ஜ் செய்யப்பட்ட ஜியோ மொபைல் நம்பரை மட்டுமே வைத்து லாகின் செய்ய வேண்டும். இந்த கிளவுட் ஸ்டோரேஜ் போக ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவிலும் கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும்.
இந்த சந்தாவின் மதிப்பு ரூ.35100 ஆக இருப்பதால், 5000 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். இதுபோக நானோ பனானா உள்ளிட்ட சலுகைகளையும் கொடுக்கும். இந்த சந்தாவுக்கு மட்டும் 18 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 18 மாதங்கள் வரையில் ஏதாவது ஒரு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) திட்டத்தை ஆக்டிவாக வைத்து இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications