56 நாட்களுக்கு ஒரே Jio ரீசார்ஜ்.. OTT.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் இப்போதும் பட்ஜெட் விலையில் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது ஜியோ (jio)நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் அதிக டேட்டா நன்மைகளும் ஓடிடி சந்தாவும் வழங்குகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் 56 நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோவின் நிறுவனத்தின் ரூ.629 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 629 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் ஜியோ ரூ.629 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகிய சலுகைகளும் இந்த திட்டத்தில் உள்ளன. இதுதவிர 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார்(JioHotstar) சந்தா இந்த திட்டம் மூலம் கிடைக்கும்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 579 prepaid plan) ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் இந்த ஜியோ ரூ.579 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த ஜியோ ரூ.579 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.579 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை இந்த ஜியோ திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் கிடைக்காது. ஒருவேளை அதிக நாள் வேலிடிட்டி, ஓடிடி மற்றும் அதிக டேட்டா எதிர்பார்க்கும் பயனர்கள் ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.
ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம்(Jio Rs 899 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். மேலும் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இதில் உள்ளன.
ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம்.


Click it and Unblock the Notifications








