கேபிள் டிவி இருக்கா? இனி மாதாந்திரம் ரூ.599 போதும்.. 150 நாட்கள் வேலிடிட்டி.. 800 டிவி சேனல்.. 12 ஓடிடி சந்தா!
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம், கேபிள் டிவியை தூக்கி சாப்பிடும்படியான அடிமட்ட விலைக்கு லைவ் டிவி சேனல்களை கொடுப்பது மட்டுமல்லாமல், கூடவே 12 ஓடிடி ஆப்களின் சந்தா, 30 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையை கொடுத்து ஒட்டுமொத்த கஸ்டமர்களையும் மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. தீபாவளி ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் மாதாந்திரம் ரூ.599 விலைக்கு 150 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டத்தை பற்றி பார்ப்போம்.
நாடு முழுவதும் டிவி சேனல்கள், ஓடிடி ஆப்கள் மற்றும் வை-பை டேட்டா போன்ற மூன்று சலுகைகளை ஜியோஏர்ஃபைபர் (Jio AirFiber) திட்டங்கள் மூலம் ஜியோ நிறுவனம் கொடுத்து வருகிறது. இந்த திட்டங்களின் விலை மிகவும் அடிமட்ட விலைக்கு இருப்பதால், கஸ்டமர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெறுகின்றன. இதில் ஆரம்ப விலையில் கிடைக்கும் திட்டமே நம்ப முடியாத சலுகைகளை கொடுக்கிறது.

ஜியோ ஏர்ஃபைபர் ரூ 599 திட்ட விவரங்கள் (Jio AirFiber Rs 599 Plan Details): இந்த ஏர்ஃபைபர் திட்டத்தில் வை-பை ரூட்டர் மூலம் டேட்டா, 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களின் சலுகை கொடுக்கப்படும். அதேபோல அன்லிமிடெட் வை-பை கால்களையும் செய்து கொள்ளலாம். ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கிறது.
மாதத்துக்கு அதிகபட்சமாக 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அதேபோல வை-பை மூலம் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். இந்த டேட்டா சலுகைக்கு பிறகு 800+ லைவ் டிவி சேனல்களின் (TV Channels) சலுகைகளை பயன்படுத்த முடியும். இதற்காக 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் (4K Android Box) கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
இந்த ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் 12 ஓடிடி சந்தாவை ( (OTT Subscription)) பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சந்தாவில் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஜியோசினிமா ப்ரீமியம் (JioCinema Premium), சோனிலிவ் (Sony Liv), ஜீ5 (ZEE5) மற்றும் சன்நெக்ஸ்ட் (Sun NXT) ஆகிய ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். அதேபோல டிஸ்கவரி பிளஸ் (Discovery+), ஹோய்சோய் (Hoichoi), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) சந்தா கிடைக்கிறது.
மேலும், ஆல்ட்பாலாஜி (ALTBalaji), ஈராஸ்நவ் (Eros Now), ஈடிவி வின் (ETV Win), ஷீமாரூமீ (ShemarooMe), டாகுபே (DocuBay) மற்றும் எபிக்ஆன் (EPICON) ஆகிய ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. இப்படி ஏராளமான சலுகைகளை வெறும் ரூ.599 பட்ஜெட்டில் பெற்று கொள்ளலாம். ஆனால், இந்த ஏர்ஃபைபர் திட்டத்தை முதலில் பெறும்போது, 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ், வை-பை ரூட்டர் போன்ற டிவைஸ்கள் வருகின்றன.
ஆகவே, 6 மாதங்களுக்கான தொகையை அட்வான்ஸ் முறையில் செலுத்தினால் மட்டுமே சேவை வழங்கப்படும். அதாவது, இந்த ஏர்ஃபைபர் திட்டத்துக்கு மாதம் ரூ.599 விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதுவே, 6 மாதத்துக்கு ரூ.3594ஆக இருக்கிறது. இந்த தொகையை ஜிஎஸ்டி கட்டணத்துடன் செலுத்தினால் மட்டுமே உங்களுக்கு சேவைகள் வழங்கப்படும். அதன்பின், 150 நாட்களுக்கு சேவைகளை பெற்று கொள்ளலாம்.
இந்த வேலிடிட்டி முடிந்த பிறகு மாதத்துக்கு இருக்கும் ரூ.599 மட்டுமே செலவு செய்து திட்டங்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதுவே மூன்று மாதங்களுக்கு திட்டம் வேண்டுமானால், தீபாவளி ஆஃபராக ரூ.2222 திட்டம் கிடைக்கிறது. இது ஒரே தொகையாகும். 30 எம்பிபிஎஸ் டேட்டா, 800+ டிவி சேனல்கள் மற்றும் 12 ஓடிடி ஆப்களின் சந்தாவை பெற்று கொள்ளலாம். 100 ஜிபி கூடுதல் டேட்டாவும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








