Home
News

கேபிள் TV-ஆ.. அது அம்பேல்.. ரூ.599-க்கு 800 சேனல்கள்.. 2 மாசம் சும்மா.. 11 ஓடிடிகள்.. 30 எம்பிபிஎஸ் டேட்டா!

ஜியோ நிறுவனத்தின் ஹோம் திட்டத்தில் ரூ.599 செலவில் 800+ லைவ் டிவி சேனல்கள் மற்றும் 11 ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், வேலிடிட்டி நாட்களில் 30 எம்பிபிஎஸ் டேட்டா டேட்டா, அன்லிமிடெட் வை-பை காலிங் போன்ற சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த சலுகைகளை 2 மாதங்களுக்கு செலவில்லாமல் பெற்று கொள்ளலாம். இந்த ஜியோ ஹோம் திட்டம் குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி சந்தாக்களுடன் கிடைக்கும் மலிவு விலை திட்டமாக இது இருக்கிறது. இந்த திட்டத்துக்கு வை-பை ரூட்டர், ஆண்ட்ராய்டு பாக்ஸ் மற்றும் ஸ்மார்ட் ரிமோட் போன்ற டிவைஸ்கள் கொடுக்கப்படுகின்றன.

கேபிள் TV-ஆ.. அது அம்பேல்.. ரூ.599-க்கு 800 சேனல்கள்.. 2 மாசம் சும்மா!

ஜியோ ரூ 599 திட்ட விவரங்கள் (Jio Rs 599 Plan Details): இந்த ஜியோ ஹோம் திட்டத்துக்கு வை-பை டேட்டா (Wi-Fi Data) மற்றும் வை-பை காலிங் (Wi-Fi Calling) சலுகைகள் கிடைக்கும். ஆகவே, 30 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். ஒரு மாதத்தில் மொத்தமாக 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா பெற்று கொள்ளலாம்.

வை-பை மூலமாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) செய்து கொள்ளலாம். இந்த சலுகைகளுக்காக வை-பை ரூட்டர் கொடுக்கப்படுகிறது. அதேபோல லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களுக்காக ஆண்ட்ராய்டு பாக்ஸ் (Android Box) கொடுக்கப்படுகிறது. அதோடு ஸ்மார்ட் ரிமோட் (Smart Remote) கஸ்டமர்களுக்கு கிடைக்கும்.

இந்த ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலமாக 800+ லைவ் டிவி சேனல்களை கஸ்டமர்கள் பார்த்து கொள்ளலாம். மேலும், 11 ஓடிடி ஆப்களின் (OTT Apps) சந்தாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இந்த சந்தாவில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (Sony Liv), ஜீ5 (ZEE5), ஈராஸ்நவ் (Eros Now), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) மற்றும் ஷீமாரூமீ (ShemarooMe) கிடைக்கிறது.

மேலும், சன்நெக்ஸ்ட் (Sun NXT), ஆல்ட்பாலாஜி (ALTBalaji), ஹோய்சோய் (Hoichoi), டிஸ்கவரிபிளஸ் (Discovery+) மற்றும் ஈடிவி வின் (ETV Win) ஆகிய ஆப்களை பயன்படுத்த முடியும். இந்த ஜியோ ஹோம் திட்டத்துக்கு மாத வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், புதிய கஸ்டமர்கள் 3 மாதங்களுக்கு சந்தா செலுத்தி பெற வேண்டும். கூடுதலாக ஜிஎஸ்எடி வசூலிக்கப்படுகிறது.

இருப்பினும், முதல் முறை திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 2 மாதங்களுக்கு இலவசமாக சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த 2 மாதங்களுக்கு எந்தவித கட்டணமும் இருக்காது. அதன்பிறகு திட்டத்துக்கான கட்டணத்தை செலுத்தி தொடரலாம். இந்த திட்டத்தை அருகில் இருக்கும் ஜியோ ஸ்டோர் (Jio Store) மூலமாக புக்கிங் செய்து கொள்ளலாம்.

அதேபோல ஜியோ வெப்சைட் மற்றும் ஜியோ ஆப் (Jio App) மூலமாகவும் புக்கிங் செய்யலாம். இதற்கு உங்களது ஜியோ நம்பரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதேபோல கூடுதலாக திட்டங்கள் இருக்கின்றன. ஆகவே, வை-பை டேட்டா வேகத்துக்கு ஏற்ப திட்டத்தை பெற்று கொள்ளலாம். ஆனால், இலவசமாக கிடைக்கும் திட்டம் ரூ.599 மதிப்பிலான சலுகைகளை கொடுக்கும்.

டேட்டா வேகம் அதிகமாக வேண்டுமானால், ஜியோ ஹோம் ரூ.899 திட்டத்துக்கு கஸ்டமர்கள் சென்று கொள்ளலாம். 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். ஆனால், அதே 1000 ஜிபி டேட்டா ஒரு மாதத்துக்கு கிடைக்கும். மேலும், 800 + டிவி லைவ் சேனல்கள், 11 ஓடிடி ஆப்கள் சந்தா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் போன்ற சலுகைகள் இந்த ஜியோ ஹோம் திட்டத்துக்கும் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 599 Plan With 30 Mbps Data 800 TV Channels 1 Months Validity Check Home Plan Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X