Home
News

கேபிள் TV-ஐ முடித்த அம்பானி.. ரூ.599-க்கு 1000+ டிவி சேனல்கள்.. 10+ ஓடிடி ஆப்கள்.. வாய்ஸ் கால்கள்.. GST வருது!

கேபிள் டிவிக்கு மாற்றாக டிடிஎச், ஐபிடிவி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வந்துவிட்டன. போதாதற்கு பிராட்பேண்ட் திட்டங்களில் லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், ஓடிடி ஆப்களும் கொடுக்கப்படுகின்றன. இதில் ஜியோ நிறுவனம், 1000+ டிவி சேனல்கள், 10+ ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், டேட்டா, வாய்ஸ் கால்களை கொடுக்கிறது.

இந்த திட்டத்தின் விலை ரூ.599ஆக இருந்தாலும் கூடுதலாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். 1 மாதத்துக்கு இந்த விலையாக இருக்கிறது. இந்த விலைக்கு பெற்றால், இன்ஸ்டாலேஷன் கட்டணம் இருக்கும். அதுவே 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கு பெற்றால், இந்த கட்டணத்தில் சலுகைகள் கிடைக்கும். இதிலும் ஜிஎஸ்டி இருக்கும்.

கேபிள் TV-ஐ முடித்த அம்பானி.. ரூ.599-க்கு 1000+ டிவி சேனல்கள்!

லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களை பாரத்து கொள்ள 4கே ஆண்ட்ராய்டு பாக்ஸ் மற்றும் ரிமோட் கொடுக்கப்படும். அதேபோல வை-பை டேட்டாவை பயன்படுத்தி கொள்ள ரூட்டர் கொடுக்கப்படும். இந்த டிவைஸ்கள் மற்றும் இன்ஸ்டாலேஷன் இருப்பதால் முதல்முறை பெறும்போது மட்டுமே கூடுதலாக சில கட்டணங்கள் இருக்கும்.

மேலும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஃபைபர் மற்றும் ஏர் ஃபைபர் சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த திட்டங்கள் கிடைக்கும். ஜியோ ஸ்டோர், மைஜியோ ஆப் அல்லது ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் வாட்ஸ்அப் வழியாகவும் இந்த திட்டங்களை புக் செய்யலாம்.

ஜியோ ரூ.599 திட்ட விவரங்கள் (Jio Rs 599 Plan Details): இந்த திட்டத்துக்கு மாதாந்திர வேலிடிட்டி கிடைக்கும். இந்த வேலிடிட்டி முழுவதும் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படும். அதிகபட்சம் 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இது ஒரு மாத டேட்டாவாகும். ஒருவேளை 6 மாதங்களுக்கு வேலிடிட்டி பெற்றால், 1 மாதத்துக்கு 1000 ஜிபி கிடைக்கும்.

1000 ஜிபி டேட்டாவை முன்கூட்டியே முடிந்துவிட்டால், 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா சலுகை கொடுக்கப்படும். இந்த டேட்டாவை பயன்படுத்தி கொள்ள வை-பை ரூட்டர் கொடுக்கப்படும். இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்களும் கொடுக்கப்படுகின்றன. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி கால்களை செய்து கொள்ளவும் முடியும்.

இப்போது, ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்களின் சலுகைக்கு வருவோம். இந்த ஜியோ ரூ.599 திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 1000+ லைவ் டிவி சேனல்கள் கிடைக்கும். இதில் பிரீமியம் சேனல்களும் இருக்கிறது. 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் வழியாக இந்த லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். அதே நேரத்தில் ஓடிடி ஆப்களையும் பார்த்து கொள்ளலாம்.

ஓடிடி சந்தாவை பொறுத்தவரையில், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (SonyLiv), ஜீ5 (ZEE5), சன்நெக்ஸ்ட் (Sun NXT) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) ஆகிய ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. மேலும், டிஸ்கவரிபிளஸ் (Discovery+), டைம்ஸ்பிளே (TimesPlay), தாரங்பிளஸ் (TarangPlus), ஈராஸ்நவ் (Eros Now), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஷீமாரூமீ (ShemarooMe) மற்றும் ஈடிவி வின் (ETV Win) ஆகிய ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. இப்படி ஒரே திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. இதை 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கு பெறும்போது, டேட்டாவும் அதிகமாக கிடைக்கும். கூடுதலாக லைவ் டிவி சேனல்கள், ஓடிடி ஆப்கள் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Jio Rs 599 Plan Plus GST With 1000 TV Channels 10 OTT Apps 30 Mbps Speed Data Voice Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X