Home
News

கேபிள் TV-ஐ ரூ.599-க்கு முடித்த அம்பானி.. 1000+ டிவி சேனல்கள், 10+ ஓடிடி ஆப்கள் சந்தா.. பிராட்பேண்ட் டேட்டா!

கேபிள் டிவி சேவைக்கு போட்டியாக தற்போது பல்வேறு பிராட்பேண்ட் மற்றும் ஓடிடி சார்ந்த சேவைகள் அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் சில பிராட்பேண்ட் திட்டங்களில் இன்டர்நெட் மட்டுமல்லாமல் லைவ் டிவி சேனல்கள், ஓடிடி சந்தாக்கள் மற்றும் வாய்ஸ் கால் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இதில் ரூ.599 விலையில் கிடைக்கும் ஒரு திட்டம் கவனம் பெறுகிறது.

ஜியோவின் இந்த ரூ.599 திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக 1000ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தின் மாதாந்திர கட்டணம் ரூ.599 என்றாலும், இதனுடன் ஜிஎஸ்டி கட்டணமும் சேர்க்கப்படும். எனவே வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய இறுதி தொகை ஜிஎஸ்டி காரணமாக அதிகமாக இருக்கும்.

கேபிள் TV-ஐ ரூ.599-க்கு முடித்த அம்பானி.. 1000+ டிவி சேனல்கள்!

ஒருவேளை 1000 ஜிபி டேட்டாவை ஒரு மாதம் முடிவதற்குள் முழுமையாக பயன்படுத்திவிட்டால், அதன் பிறகும் இன்டர்நெட் சேவை முற்றிலும் நிறுத்தப்படாது. அதற்கு பதிலாக 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை தொடர்ந்து பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இதனால் டேட்டா வரம்பு முடிந்தாலும் அடிப்படை இணைய பயன்பாட்டை தொடர முடியும்.

இத்திட்டத்தில் இன்டர்நெட் சேவையுடன் வாய்ஸ் கால் வசதியும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்களை மேற்கொள்ள முடியும். இதனால் வீட்டில் இன்டர்நெட் மற்றும் லைவ் டிவி சேனல்கள் சேவையுடன் வாய்ஸ் கால் வசதியையும் ஒரே திட்டத்தின் கீழ் பெற முடிகிறது. இந்த ரூ.599 திட்டத்தின் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் 1000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் வழங்கப்படுவதுதான்.

இதில் பிரீமியம் சேனல்களும் இடம்பெறுகின்றன. இந்த சேனல்களை பார்ப்பதற்கு ஜியோ சார்பில் 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் மற்றும் ரிமோட் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் பல பிரபலமான ஓடிடி தளங்களுக்கான சந்தாக்களும் வழங்கப்படுகின்றன. ஜியோஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, சன்நெக்ஸ்ட் மற்றும் ஹோய்சோய் உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இதில் பயன்படுத்த முடியும்.

இதனால் தனித்தனியாக பல ஓடிடி சந்தாக்களை பெற வேண்டிய தேவையை குறைக்க முடியும். இதுமட்டுமல்லாமல் டிஸ்கவரி+, டைம்ஸ்பிளே, தாரங்பிளஸ், ஈராஸ்நவ் மற்றும் லயன்ஸ்கேட் பிளே ஆகிய ஓடிடி சேவைகளும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. ஷீமாரூமீ மற்றும் ஈடிவி வின் போன்ற ஓடிடி தளங்களும் வழங்கப்படுகின்றன. மொத்தத்தில் லைவ் டிவி மற்றும் பல ஓடிடி தளங்களை ஒரே இணைப்பில் பயன்படுத்தும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்களுக்கு வை-ஃபை பயன்பாட்டுக்காக ரூட்டரும் வழங்கப்படுகிறது. அதேபோல டிவி சேவைகளை பயன்படுத்த 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் மற்றும் ரிமோட் கிடைக்கிறது. எனவே முதல் முறையாக இணைப்பை பெறும்போது டிவைஸ் மற்றும் இன்ஸ்டாலேஷன் காரணமாக கூடுதல் கட்டணம் இருக்கலாம்.

ஒரு மாத திட்டமாக பெறும்போது ரூ.599 கட்டணத்துடன் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். அதேநேரம் 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கு திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால திட்டங்களில் டேட்டா மற்றும் இதர சேவை சலுகைகளிலும் மாற்றங்கள் இருக்கலாம்.

இந்த ஜியோ பிராட்பேண்ட் திட்டம் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும் என்று கூற முடியாது. ரிலையன்ஸ் ஜியோவின் ஃபைபர் அல்லது ஏர் ஃபைபர் சேவை கிடைக்கும் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த திட்டத்தை பெற முடியும். கிடைக்கும் தன்மை பகுதியைப் பொறுத்து மாறுபடலாம்.

ஜியோ ஸ்டோர், MyJio செயலி, ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் இந்த திட்டத்தை புக் செய்யும் வசதி உள்ளது. எனவே ரூ.599 திட்டத்தை தேர்வு செய்வதற்கு முன்பு உங்கள் பகுதியில் ஜியோ ஃபைபர் அல்லது ஏர் ஃபைபர் சேவை கிடைக்கிறதா என்பதையும், இன்ஸ்டாலேஷன் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட கூடுதல் கட்டணங்கள் எவ்வளவு என்பதையும் சரிபார்ப்பது முக்கியம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 599 Broadband Plan 30Mbps Speed, 1000 TV Channels 10 OTT Apps and Voice Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X