Home
News

கேபிள் TV கதை முடிந்தது.. கட்டணமில்லா 1000+ டிவி சேனல்கள்.. 10+ ஓடிடி சந்தா.. 2026 ஆரம்பமே Jio க்கு கும்பிடு!

ஜியோ நிறுவனத்தின் ஏர்ஃபைபர் திட்டங்கள் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. கேபிள் டிவிகளுக்கு மாற்றாக லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தாவையும் கொடுத்து வருகின்றன. இப்போது, இரண்டு மாதங்களுக்கு இலவச கனெக்சன் வழியாக 1000+ டிவி சேனல்களை கொடுத்துள்ளது.

ஒட்டுமொத்த ஜியோ கஸ்டமர்களுக்கும் ஜியோஹோம் திட்டம் இரண்டு மாதங்களுக்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்ட இந்த ஜியோஹோம் 2 மாத இலவச திட்டம் 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் கிடைக்கிறது. 1000+ டிவி சேனல்கள், 10+ ஓடிடி ஆப்கள், வை-பை டேட்டா மற்றும் வை-பை கால்கள் கிடைக்கின்றன.

கேபிள் TV கதை முடிந்தது.. கட்டணமில்லா 1000+ டிவி சேனல்கள்.. 10+ ஓடிடி!

ஜியோ வெப்சைட் அல்லது மைஜியோ ஆப் வழியாக இந்த திட்டத்தை பெற்று கொள்ளலாம். ஜியோ ஏர்ஃபைபர் (Jio Airfiber) அல்லது ஜியோஃபைபர் (JioFiber) திட்டங்கள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படும். முதல் இரண்டு மாதங்களுக்கு இலவமாக கிடைக்கும். பிறகு கட்டணம் செலுத்தி திட்டத்தை தொடரலாம்.

ஜியோ ரூ. 599 ஏர்ஃபைபர் திட்ட விவரங்கள் (Jio Rs 599 AirFiber Plan Details): 30 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டாவை இந்த ஏர்ஃபைபர் திட்டம் கொண்டுள்ளது. மாதத்துக்கு 1000 ஜிபி டேட்டாவை அதிகபட்சம் பயன்படுத்தலாம். பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா கிடைக்கும். இந்த வை-பை வழியாக லோக்கல் & எஸ்டிடி (Local & STD) கால்களை செய்யலாம்.

மேலும், 1000+ லைவ் டிவி சேனல்கள் (Live TV Channels) கிடைக்கும். இந்த சேனல்களுக்காக ஆண்ட்ராய்டு பாக்ஸ் கிடைக்கும். ஓடிடி ஆப்களையும் இந்த பாக்ஸ் வழியாக டிவியில் கனெக்ட் செய்து பார்த்து கொள்ளலாம். ஜியோஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, சன்நெக்ஸ்ட், ஹோய்சோய், டிஸ்கவரிபிளஸ், டைம்ஸ்பிளே, தாரங்க்பிளஸ் (TarangPlus) மற்றும் ஈராஸ் நவ் ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன.

மேலும், லயன்ஸ்கேட் பிளே, ஷீமாரூமீ மற்றும் ஈடிவி வின் ஆகிய ஓடிடிகளும் கிடைக்கின்றன. இந்த 30 எம்பிபிஎஸ் வை-பை டேட்டா, 1000+ லைவ் டிவி சேனல்கள் மற்றும் 10+ ஓடிடி ஆப்களை கட்டணமில்லாமல், இரண்டு மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இன்ஸ்டாலேஷன் கட்டணம் மற்றும் இரண்டு மாதங்களுக்கு பிறகான கட்டணம் இருக்கும்.

புக்கிங் செய்வது எப்படி?

1. ஜியோ நிறுவனத்தின் வலைதளத்துக்கு சென்று கொள்ளுங்கள். ஹோம் பேஜ்ஜில் ஜியோஹோம் இரண்டு மாத ப்ரீ டிரையல் (JioHome 2 Month Free Trial) போஸ்டர் தோன்றும். இதற்கு கீழே புக் நவ் (Book Now) விருப்பம் இருக்கும். இதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

2. இப்போது, பின் கோட் மற்றும் இன்ஸ்டாலேஷன் செய்யப்பட வேண்டிய முகவரியை கொடுக்க வேண்டும். இதற்கான பாக்ஸ் வலது புறத்தில் தோன்றும். பின் கோடை கொடுத்த உடனே கீழே உங்களது பகுதியின் பெயரை டைப் செய்தாலே போதும். அங்கு ஏர்ஃபைபர் திட்டங்கள் கிடைக்கிறதா என்பது தெரியவந்துவிடும்.

3. ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கல் கிடைக்கும்பட்சத்தில் உங்களது மொபைல் நம்பர் மற்றும் பெயர் ஆகிய விவரங்களை கொடுக்க வேண்டும். இதை கொடுத்துவிட்டால் போதும், கீழே விருப்பத்தை உறுதிபடுத்துங்கள் (Confirm Intrest) தோன்றும். இதை கிளிக் செய்தால் போதும், அவ்வளவுதான் புக்கிங் செயல்முறை முடிந்துவிட்டது.

4. இந்த செயல்முறைக்கு பிறகு மேசேஜ் வழியாக உறுதிப்படுத்தல் தெரிவிக்கப்படும். அதேபோல அருகில் இருக்கும் ஜியோ ஸ்டோர்களுக்கு விவரங்கள் பகிரப்படும். ஆகவே, ஜியோ ஏஜென்ட்கள் வழியாக தொடர்பு கொண்டு சேவை கொடுக்கப்படும். மேலும், புக்கிங் தொடர்பான ஸ்டேட்டஸ் செக் செய்ய இதே செயல்முறையை பயன்படுத்தலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 599 AirFiber Plan With 1000 TV Channels 10 OTT 2 Months FREE Connection Continues in 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X