ஜியோ சிம் கார்டு இருக்கா? உடனே இதை ரீசார்ஜ் பண்ணிடுங்க.. அடுத்த 56 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா!
ஜியோ சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்கள் நல்ல வேலிடிட்டியை மலிவான விலைக்கு பெற்று கொள்ள வேண்டுமானால், இப்போது பார்க்க இருக்கும் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் போன்ற வழக்கமான சலுகைகளுடன் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். இந்த மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை பார்க்கலாம்.
ஜியோவி்ல் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் சில மட்டுமே கிடைக்கின்றன. இதில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை கொடுக்கும் ரூ.579 திட்டம் நல்ல சலுகைகளை கொடுத்துள்ளது. இதில் கூடுதலாக கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ ப்ரோ சந்தாவும் கிடைக்கும். ஆனால், இதை 12 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

ஜியோ ரூ. 579 திட்ட விவரங்கள் (Jio Rs 579 Plan Details): இதில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் 56 நாட்களுக்கு கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் அந்த டேட்டாக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். 56 நாட்களுக்கு மொத்தமாக 84 ஜிபி டேட்டா கஸ்டமர்களுக்கு கிடைக்கும்.
அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. ஆகவே, 56 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படும். இந்த சலுகைகள் போக கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ப்ரோ (Gemini Pro) திட்டம் கொடுக்கப்படும்.
இதை 18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், 56 நாட்கள் வேலிடிட்டி முடிந்த பிறகு நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே 18 மாதங்கள முழுவதும் ஜெமினி ப்ரோ சலுகை கொடுக்கப்படும். மேலும், ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை கொடுக்கப்படுகிறது.
ஒருவேளை இதைவிட கூடுதல் வேலிடிட்டி கிடைக்க வேண்டுமானால், ஜியோ ரூ.666 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் 2 மாதங்களுக்கும் மேல் 10 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதாவது, 84 நாட்கள் வேலிடிட்டிக்கு உள்ளாகவும், 56 நாட்கள் வேலிடிட்டி மேலாகவும் இந்த திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ. 666 திட்ட விவரங்கள் (Jio Rs 666 Plan Details): முந்தைய திட்டத்தில் கிடைத்த சலுகைகள் இதிலும் கிடைக்கின்றன. ஆனால், வேலிடிட்டி மட்டும் கூடுதலாக கொடுக்கப்படும். அதாவது, முந்தைய திட்டத்தில் 56 நாட்களுக்கு சலுகைகள் கிடைத்தது. அதே சலுகைகள் இதில் 70 நாட்களுக்கு கொடுக்கப்படும். ஆகவே, நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை பெறலாம்.
இந்த வேலிடிட்டிக்கு 105 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் கிடைக்கும் போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படும். மேலும், முந்தைய திட்டத்தில் பார்த்த நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல 18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ சந்தா கிடைக்கிறது. இதை தொடர்ந்து பெற 70 நாட்கள் வேலிடிட்டி முடிந்த பிறகும் 1.5 ஜிபி டேட்டாவை தினசரிக்கு கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இதில் உங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப திட்டங்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








