Home
News

அதான் சார் அம்பானி.. ரூ.579-க்கு 90 நாட்கள் ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1 ஜிபி டேட்டா.. 100 எஸ்எம்எஸ்!

ஜியோ (Jio) நிறுவனத்தில் இருந்து அதிகமாக ரீசார்ஜ் செய்யப்படும் ரூ.579 விலை கொண்ட திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data) மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், 90 நாட்களுக்கு ஓடிடி (OTT) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தின் (Jio Prepaid Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

90 நாட்களுக்கு ஓடிடி சந்தா கொடுக்கப்படுவதால், இந்த திட்டத்துக்கும் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுக்கு மட்டுமே 56 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். ஆனால், ஓடிடி சந்தா மட்டும் 90 நாட்களுக்கு கொடுக்கப்படும். ஆகவே, 56 நாட்களுக்கு பிறகு அடுத்த ரீசார்ஜ் தேவைப்படும்.

அதான் சார் அம்பானி.. ரூ.579-க்கு 90 நாட்கள் ஓடிடி சந்தா.. அன்லிமிடெட்!

அதாவது, 56 நாட்கள் வேலிடிட்டி முடிந்த 48 மணி நேரத்துக்குள் அடுத்த ரீசார்ஜ் செய்தால் மட்டுமே மீதம் இருக்கும் ஓடிடி சந்தாவை பயன்படுத்த முடியும். இல்லாதபட்சத்தில் அந்த ஓடிடி சந்தா காலாவதி செய்யப்படும். ஆகவே, ஓடிடி சலுகையை மட்டும் தொடர்ந்து பெறுவதற்கு அடுத்த ரீசார்ஜை உடனடியாக செய்து கொள்ளுங்கள், இப்போது திட்டத்தில் கிடைக்கும் சலுகைகளை பார்க்கலாம்.

ஜியோ ரூ 579 திட்ட விவரங்கள் (Jio Rs 579 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்கும் 56 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களையும் (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது.

இப்படி நாளொன்றுக்கு கொடுக்கப்படும் டேட்டாவை முழுவதும் முடித்துவிட்டால், அதன்பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படும். எப்படி பார்த்தாலும், 56 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் 84 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படாது.

ஆகவே, ஜியோ கஸ்டமர்களுக்கு 4ஜி வேகத்தில் மட்டுமே டேட்டா சேவை கொடுக்கப்படும். இந்த மூன்று முக்கிய சலுகைகள் போக, ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த சந்தாவையே 90 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடிகிறது. சொல்லப்போனால், இந்த ஓடிடி சந்தாவானது, திட்டத்தின் சலுகை கிடையாது.

அண்மையில் சேர்க்கப்பட்ட கூடுதல் சலுகையாகும். ஆகவே, இதை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். இருப்பினும், 90 நாட்களுக்கு மொபைல் சலுகைகள் கிடைப்பதால், இது தனி வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், அடுத்த கூடுதல் சலுகையாக ஜியோ ஏஐ கிளவுட் (JioAICloud) ஸ்டோரேஜ் இருக்கிறது. 50 ஜிபிக்கான ஸ்டோரேஜ் கொடுக்கப்படுகிறது.

இந்த ஸ்டோரேஜை ஜியோ ஏஐ கிளவுட் ஆப் மூலம் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகள் எல்லாம் போக வழக்கமாக கிடைக்கும் ஜியோ டிவி (Jio TV) சந்தாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. ஒட்டுமொத்தமாகவே இந்த திட்டம் அதிகப்படியான சலுகைகளை பேக் செய்துள்ளது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா வேண்டாம் என்றால், இதை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்,

ஒருவேளை அன்லிமிடெட் 5ஜி டேட்டா வேண்டுமானால், ரூ.629 விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படுகிறது. மீதமுள்ள சலுகைகள் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே இருக்கின்றன. ஜியோஹாட்ஸ்டார் சந்தா இதற்கும் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 579 Plan With 56 Days Validity 84GB DATA Unlimited Voice Calls JioHotstar App
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X