56 நாட்களுக்கு நோ-டென்ஷன்.. 84 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம்.. Jio-க்கு குஷி!
ஜியோ (Jio) சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்கள் 28 நாட்கள் வேண்டாம்.. 30 நாட்கள் வேண்டாம்.. 56 நாட்கள் வேலிடிட்டிதான் வேண்டும் என்று கேட்டால், அவர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), 84 ஜிபி டேட்டா (84GB Data), 100 எஸ்எம்எஸ் (100 SMS) மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவுடன் கிடைக்கும் பக்கா திட்டம் இருக்கிறது. இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தின் (Jio Prepaid Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
2 மாதங்களுக்கு ஜியோ ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், 56 நாட்கள் திட்டமே பக்கா தேர்வாக இருக்கும். சொல்லப்போனால், 56 வேலிடிட்டியில் மட்டுமே சலுகைகளும் நன்றாக இருக்கின்றன. இப்போது நாம் பார்க்க போகும் ஜியோ ரூ 579 திட்டமும் 1.5 ஜிபி தினசரி டேட்டாவுடன் தொடங்குகிறது. இதற்கு அடுத்து ரூ.629 மதிப்பிலான திட்டத்துக்கு செல்ல வேண்டி இருக்கும்.

ஜியோ ரூ 579 திட்ட விவரங்கள் (Jio Rs 579 Plan Details): இந்த ஜியோ திட்டத்தில் 84 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆனால், மொத்தமாக கிடைக்காது. நாளொன்றுக்கு 1.5 ஜிபி வீதம் 56 நாட்களுக்கும் கிடைக்கிறது. இந்த 1.5 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்திய பிறகும் டேட்டா சலுகை கிடைக்கும். ஆனால், 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு குறைக்கப்பட்டு கிடைக்கும்.
அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் சரியாக இருக்காது. ஏனென்றால், திட்டத்தின் 1.5 ஜிபி டேட்டாவுக்கு மேல் எந்த டேட்டாவும் இதில் கிடைக்காது. ஆகவே, கூடுதல் டேட்டா தேவைப்படும்பட்சத்தில் டேட்டா வவுச்சர்களுக்கு செல்லலாம். வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுக்கும் பஞ்சமில்லை.
ஏனென்றால், இந்த திட்டத்தில் கிடைக்கும் 56 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கஸ்டமர்களுக்கு வருகிறது. எஸ்எம்எஸ் சலுகைகளும் வழக்கமான ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைப்பதை போல நாளொன்றுக்கு 100 வீதம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த டேட்டா, கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்ல, ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ சினிமா (Jio Cinema) ஆப்களின் சந்தா இலவசமாக கொடுக்கப்படுகிறது. இதில் ப்ரீமியம் மூவிக்கள், சீரிஸ்கள் மற்றும் டிவி சேனல்கள் கிடைக்காது. இலவசமாக கிடைப்பதை பார்த்து கொள்ள முடியும். இப்போது, அடுத்த 56 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தை பார்ப்போம்.
இந்த 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமானது, ரூ.629 விலைக்கு கிடைக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப திட்டத்தில் டேட்டா சலுகைகள் கூடுதலாக கிடைக்கின்றன. அதாவது, முந்தைய திட்டத்தில் 1.5 ஜிபி டேட்டா கிடைத்தது. ஆனால், இதில் 2 ஜிபி டேட்டாவை நாளொன்றுக்கு பயன்படுத்த முடியும். இந்த டேட்டாவுக்கு பிறகு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது.
ஆகவே, 56 நாட்களுக்கு மொத்தமாக கிடைக்கும் 112 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் பயன்படுத்தி கொள்ள முடியும். 5ஜி டேட்டா சலுகை கிடைத்தாலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை கொடுக்கிறது. இந்த டேட்டா சலுகைகளுக்கு பிறகு வரும் சலுகைகள் முந்தையை திட்டத்தில் கிடைத்ததை போலவே இருக்கின்றன.
அதன்படி 100 எஸ்எம்எஸ்களும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களும் நாள்தோறும் செய்ய கிடைக்கிறது. அதேபோல ஜியோ ஆப்களான ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி ஓடிடி ஆப்களின் சலுகை கிடைக்கிறது. ஜியோவில் 56 நாட்கள் வேலிடிட்டியில் இந்த ஆப்ஷன்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








