Home
News

ஜியோ சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? கம்மி பட்ஜெட்ல 56 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்.. விட்றாதீங்க..

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக டேட்டா நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். எனவே தான் ஜியோ நிறுவனங்களின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ ஜியோ கம்மி பட்ஜெட்டில் 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் இரண்டு திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? கம்மி பட்ஜெட்ல 56 நாட்கள் வேலிடிட்டி

ஜியோவின் ரூ.629 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 629 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.629 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகிய சலுகைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.

மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார்(JioHotstar) சந்தா இந்த ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் கிடைக்கும். இதுதவிர ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவும் இதில் வழங்கப்படும்.

ஜியோவின் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 579 prepaid plan) தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.579 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த ஜியோ ரூ.579 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.579 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை இந்த ஜியோ திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவும் இதில் வழங்கப்படும்.

குறிப்பாக கம்மி பட்ஜெட்டில் 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் ரூ.579 மற்றும் ரூ.629 ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். ஒருவேளை அதிக டேட்டா மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி தருகிறது இந்த ஜியோ திட்டம். 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

ஜியோ சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? கம்மி பட்ஜெட்ல 56 நாட்கள் வேலிடிட்டி

மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம்.

ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Jio Rs.579 and Rs.629 prepaid plans offer 56 days of validity and unlimited benefits: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X