Home
News

கேபிள் TV, DTH வைத்திருப்பவர்களுக்கு Jio ஒரே போடு.. 1000+ சேனல்கள்.. 200+ HD சேனல்கள்.. 1000 ஜிபி டேட்டா!

கேபிள் டிவி, டிடிஎச் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு கிடைக்கும் லைவ் டிவி சேனல்களுக்கு நிகராக ஜியோ நிறுவனத்தின் ஃபைபர் திட்டங்களிலும் லைவ் டிவி சேனல்கள் கிடைக்கின்றன. இதில் ஏற்கனவே கஸ்டமர்களாக இருப்பவர்களுக்கு 1000+ டிவி சேனல்களுடன் 200+ எச்டி சேனல்களும் வேண்டுமானால், இப்போது பார்க்க இருக்கும் லைவ் டிவி திட்டங்களை பெற்று கொள்ளலாம்.

இதேபோல கூடுதல் டேட்டா வேண்டுமானால், 1000 ஜிபி டேட்டாவுடன் கம்மியான விலைக்கு கிடைக்கும் டேட்டா சாச்செட் (Data Sachet) திட்டங்களை பெற்று கொள்ளலாம். ஆகவே, ஏற்கனவே, ஜியோ ஃபைபர், ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு ஆட்-ஆன் திட்டங்களாக கிடைக்கும் இந்த லைவ் டிவி மற்றும் டேட்டா சாச்செட் திட்டங்களை பார்க்கலாம்.

கேபிள் TV, DTH வைத்திருப்பவர்களுக்கு Jio ஒரே போடு.. 1000+ சேனல்கள்!

ஜியோ ரூ.555 திட்ட விவரங்கள் (Jio Rs 555 Plan Details): இந்த டேட்டா சாச்செட் திட்டத்தில் பில் சைக்கிள் வேலிடிட்டி கிடைக்கும். அதாவது, ஆக்டிவ் திட்டத்தின் வேலிடிட்டி வரையில் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் மொத்தமாக 1000 ஜிபி டேட்டா கிடைக்கும். இது மிகவும் மலிவான விலையாக இருப்பதால், ஜியோ ஃபைபர், ஜியோ ஏர்ஃபைபர் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

இந்த 1000 ஜிபி டேட்டா முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இதைவிட கூடுதல் டேட்டா வேண்டுமானால், அதிக விலைக்கு கிடைக்கும் ஜியோ ரூ.1555 திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். இதில் முந்தைய திட்டத்தைவிட 2 மடங்கு அதிக டேட்டா கிடைக்கும். ஆனால், இதற்கும் ஆக்டிவ் திட்டத்தை கஸ்டமர்கள் வைத்திருக்க வேண்டும்.

ஜியோ ரூ.1555 திட்ட விவரங்கள் (Jio Rs 1555 Plan Details): இந்த டேட்டா சாச்செட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 3000 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கும் பில் சைக்கிள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, ஆக்டிவ் திட்டத்தை எவ்வளவு நாட்கள் நீடிக்கிறீர்களோ அந்த நாட்கள் வரையில் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.

64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கும். இந்த டேட்டா சலுகையை போலவே லைவ் டிவி சேனல்களுக்கும் பிரத்யேக திட்டங்கள் இருக்கிறது. இதில் 200+ எச்டி சேனல்கள் கிடைக்கிறது. இதை ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த லைவ் டிவி சேனல் திட்டத்தையும் பெற்று கொள்ள ஆக்டிவ் திட்டத்தை கஸ்டமர்கள் வைத்திருக்க வேண்டும்.

ஜியோ ரூ.1000 திட்ட விவரங்கள் (Jio Rs 1000 Plan Details): இந்த லைவ் டிவி சேனல்கள் திட்டத்தில் ஜியோ டிவிபிளஸ் சந்தா கிடைக்கிகது. ஆகவே, வழக்கமாக கிடைக்கும் 1000+ லைவ் டிவி சேனல்கள் கொடுக்கப்படும். இதுபோக 200+ எச்டி டிவி சேனல்களையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். முந்தைய திட்டங்களை போலல்லாமல், இதில் 60 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஜியோ ரூ.2000 திட்ட விவரங்கள் (Jio Rs 2000 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 150 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, 5 மாதங்களுக்கு 1000+ லைவ் டிவி சேனல்கள் மற்றும் 200+ எச்டி டிவி சேனல்களும் கிடைக்கும். இந்த திட்டங்களை பெறுவதற்கும் ஆக்டிவ் திட்டம் வேண்டும். ரூ.599 விலை முதல் ஜியோ ஃபைபர் திட்டங்கள் கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
Jio Rs 555 Plan With 1000GB Data Rs 1000 Plan With 1000 Live TV Channels For Fiber Customers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X