இனி கேபிள் TV, DTH கதை முடிந்தது.. 84 நாட்கள், 15 OTT, 1000 TV சேனல்கள்.. கம்மி பட்ஜெட்.. சன் TV, KTV வருது..
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட ஓடிடி சந்தா மற்றும் லைவ் டிவி சேனல்கள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது ஜியோ நிறுவனம். குறிப்பாக ஜியோ நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.
அதேபோல் சமீபத்தில் ஜியோ நிறுவனம் லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி சந்தா தரும் கம்மி பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை கொண்டுவந்தது. அதாவது ஜியோ நிறுவனம் ரூ.550 ப்ரீபெய்ட் திட்டத்தை தான் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் மற்றும் வேவிடிட்டி எத்தனை நாட்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.

ஜியோ ரூ.550 திட்டம் (Jio Rs 550 Plan): குறிப்பாக இது டேட்டா பேக் திட்டம் ஆகும். ஆகவே, உங்களிடம் பேஸ் திட்டம் இருக்க வேண்டும். அதுவும் 90ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை கொடுக்கிறது. மேலும் இந்த டேட்டாவுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல இந்த திட்டத்தில் லைவ் டிவி மற்றும் ஓடிடி ஆப்களுக்கும் கிடைக்கும்.
அதன்படி ஜியோவின் ரூ.550 திட்டம் ஆனது 1000+ லைவ் டிவி சேனல்களை தருகிறது. அதாவது இதில் பிரீமியம் சேனல்கள் உடன் சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network), வார்னர் ப்ரோஸ் (Warner Bros), டிஸ்கவரி ( Discovery), ஈடிவி (ETV) போன்ற பல சேனல்கள் கிடைக்கின்றன.
குறிப்பாக ஜியோ டிவியில் இந்த ஒட்டுமொத்த லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யூடியூப் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ லைட், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi) போன்ற 15 ஓடிடி சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.550 ப்ரீபெய்ட் திட்டம்.
எனவே ஜியோ ரூ.550 திட்டம் லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், ஓடிடி ஆப்களையும் 84 நாட்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கப்படவில்லை. மேலே கூறியபடி ஏற்கனவே, ஆக்டிவில் இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்கள் திட்டமாக இதை ஆட் செய்து கொள்ளலாம். குறிப்பாக இந்த கம்மி விலை திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் ஜியோ வைத்துள்ள ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளையும் இப்போது பார்க்கலாம்.
ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி தருகிறது இந்த ஜியோ திட்டம். 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம்.
ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications