Home
News

கேபிள் TV, DTH குடுமி Jio அம்பானி கையில.. 1000+ டிவி சேனல்கள்.. 10+ ஓடிடி சந்தா.. 3 மாதத்துக்கு வேலிடிட்டி!

கேபிள் டிவி, டிடிஎச் சேவைகளில் மட்டுமே கிடைக்கும் லைவ் டிவி சேனல்களை ஜியோ நிறுவனம் ஜியோடிவி ஆப் வழியாக கொடுத்து வருகிறது. ரூ.55 முதல் ரூ.2000 வரையில் திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், 3 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் ரூ.550 திட்டம் அதிகமாக பெறப்படுகிறது. இந்த திட்டத்தை பெற சில விதிமுறைகள் இருக்கின்றன.

ஜியோ ரூ.550 திட்ட விவரங்கள் (Jio Rs 550 Plan Details): இதுவொரு டேட்டா, ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்கள் கொண்ட திட்டமாக இருப்பதால், வாய்ஸ் கால்களுடன் கூடிய ஆக்டிவ் பேஸ் திட்டம் (Active Base Plan) இருக்க வேண்டும். அதிலும், ஏதாவது ஒரு பேஸ் திட்டம் இருந்தால் போதாது, 3 மாதங்கள் அல்லது 1 வருட வேலிடிட்டி கொண்ட பேஸ் திட்டத்தை வைத்திருக்க வேண்டும்.

கேபிள் TV, DTH குடுமி Jio அம்பானி கையில.. 1000+ லைவ் டிவி சேனல்கள்!

வாய்ஸ் ஒன்லி திட்டத்தை (Voice Only Plan) வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் கிடைக்காது. அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா இல்லாத திட்டங்கள் மற்றும் 3 மாதங்களுக்கு குறைவாக வேலிடிட்டி கொண்ட திட்டங்களுக்கும் இந்த டேட்டா, ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்களை கொண்ட திட்டம் கிடைக்காது. இப்போது, சலுகைகளுக்கு வரலாம்.

இந்த ஜியோ ரூ.550 திட்டத்தில் 90 ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொடுக்கப்படுகிறது. போஸ்ட் டேட்டாவை 90 ஜிபி டேட்டா முடிந்த பிறகு பயன்படுத்தி கொள்ளலாம். 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக இந்த ஜியோ ரூ.550 திட்ட ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

ஓடிடி ஆப்களை பார்க்கையில், பிரீமியம் சந்தாவாக யூடியூப் பிரீமியம் (YouTube Premium), அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) ஆகிய ஆப்கள் கிடைக்கின்றன. இந்த ஆப்களை மட்டும் மைஜியோ (MyJio) ஆப் வழியாக ஆக்டிவேட் செய்து கொள்ள வேண்டும். ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி (JioHotstar OTT) கிடைக்கிறது. இதை மொபைல் நம்பர் வைத்து லாகின் செய்யலாம்.

மேலும், சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (Zee5) (ஸ்போர்ட்ஸ் கிடையாது), சன்நெக்ஸ் (SunNXT), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), கான்ச்சா லங்கா (Kanccha Lannka), ஈடிவி வின் (ETV Win), சாவ்பால் (Chaupal), ஃபேன்கோட் (FanCode) மற்றும் தாரங் பிளஸ் (Tarang Plus) கிடைக்கிறது. டைம்ஸ் பிளே (Times Play), ஹோய்சோய் (Hoichoi) ஆப்கள் கிடைக்கின்றன.

ஜியோடிவி மொபைல் ஆப் (JioTV Mobile App) வழியாக இந்த ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும். அடுத்து லைவ் டிவி சேனல்களின் சந்தாவுக்கு வருவோம். இந்த ஜியோ ரூ.550 திட்டத்தில் 1000+ லைவ் டிவி சேனல்கள் கிடைக்கின்றன. இதில் எச்டி சேனல்களும் கொடுக்கப்படுகின்றன. ஜியோஸ்டார் (JioStar) கிடைக்கும். ஆனால், ஸ்போர்ட்ஸ் கன்டென்ட்கள் கிடைக்காது.

சோனி என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் (Sony Entertainment Network) கீழ் கிடைக்கும் ஒட்டுமொத்த சேனல்களும் கொடுக்கப்படும். ஆனால், இதிலும் ஸ்போர்ட்ஸ் கன்டென்ட்கள் கிடைக்காது. மேலும், சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network) கீழ் கிடைக்கும் சன் டிவி, கேடிவி உள்ளிட்ட லைவ் டிவி சேனல்களையும் இந்த ஜியோ ரூ.550 திட்டம் கொடுக்கும்.

இதுபோக வார்னர் ப்ரோஸ் ( Warner Bros), டிஸ்கவரி (Discovery) மற்றும் ஈடிவி (ETV) நிறுவனங்களின் லைவ் டிவி சேனல்களையும் பார்த்து கொள்ளலாம். ஜியோடிவி மொபைல் ஆப் வழியாக இந்த லைவ் டிவி சேனல்கள் கிடைக்கும். ஆகவே, ஒரேவொரு ஆப் வழியாக 10+ ஓடிடி ஆப்கள் மற்றும் 1000+ லைவ் டிவி சேனல்களை 3 மாதங்களுக்கு பார்த்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 550 Plan With 84 Days OTT Pass 1000 TV Channels Available Only 3 Months Or 1 Year Base Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X