Home
News

கேபிள் TV, DTH அவுட்! ரூ.55-க்கு 1000+ டிவி சேனல்கள்.. 30 நாட்கள் சந்தா.. தமிழ், தெலுங்கு TV சேனல்கள் வருது!

கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சேவைகளுக்கு நேரடியாக போட்டிக் கொடுக்கும்படி ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனம் லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களை கொடுத்து வருகிறது. மொபைலில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய லைவ் டிவி சேனல்கள் மற்றும் டிவியில் பயன்படுத்தக்கூடிய லைவ் டிவி சேனல்கள் என்று 2 வகையாக இவை இருக்கின்றன. இதில் எந்தெந்த திட்டங்கள் மலிவாக கிடைக்கின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.

ஜியோ ரூ.55 திட்ட விவரங்கள் (Jio Rs 55 Plan Details): இந்த திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் 10 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோஸ்டார் (JioStar), சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network), வார்னர் ப்ரோஸ். டிஸ்கவரி (Warner Bros. Discovery) மற்றும் ஈடிவி (ETV) உள்ளிட்ட நிறுவனங்களின் பிரீமியம் சேனல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

கேபிள் TV, DTH அவுட்! ரூ.55-க்கு 1000+ சேனல்கள்.. 30 நாட்கள் சந்தா!

ஜியோஸ்டார் மூலம் 1000+ லைவ் டிவி சேனல்களை பார்க்க முடியும். இதன் மூலம் ஸ்டார் பிளஸ் எச்டி (Star Plus HD), கலர்ஸ் எச்டி (Colors HD) போன்ற சேனல்களும் கிடைக்கின்றன. சோனி என்டர்டெயின்மென்ட் மூலம் செட் எச்டி (SET HD), சோனி சாப் எச்டி (Sony SAB HD) உள்ளிட்ட சேனல்களுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் இடம்பெறவில்லை.

சன் டிவி நெட்வொர்க் மூலம் சன் டிவி எச்டி (Sun TV HD), கேடிவி எச்டி (KTV HD) உள்ளிட்ட சேனல்களை அணுகலாம். அதேபோல், வார்னர் ப்ரோஸ். டிஸ்கவரி மூலம் டிஸ்கவரி சேனல் (Discovery Channel), அனிமல் பிளானட் (Animal Planet) போன்ற சேனல்கள் கிடைக்கின்றன. ஈடிவி நெட்வொர்க் சார்பில் ஈடிவி எச்டி (ETV HD), ஈடிவி தெலுங்கு (ETV Telugu) உள்ளிட்ட சேனல்களையும் பார்க்கலாம்.

இந்த திட்டத்தின் கீழ் 10 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது. அந்த டேட்டா முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பு லைவ் டிவி சேனல்கள் மட்டுமே கிடைப்பதாகும். மொபைலில் மட்டுமே பார்க்க முடியும். டிவி சேனல்களுக்கான அணுகல் 30 நாட்களுக்கு மட்டுமே இருக்கும். அதன் பிறகு மீண்டும் ரூ.55 செலுத்தி திட்டத்தை தொடரலாம்.

ஜியோ ரூ.2222 திட்ட விவரங்கள் (Jio Rs 2222 Plan Details): ஜியோஹோம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த திட்டத்தில் 3 மாதங்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதனால், ஒரு மாத வேலிடிட்டி கொண்ட திட்டங்களைப் போல ஜிஎஸ்டி கட்டணம் தனியாக வசூலிக்கப்படுவதில்லை. நேரடியாக 3 மாதங்களுக்கு சேவை கிடைப்பது இதன் முக்கிய அம்சமாகும்.

இந்த திட்டத்தை தேர்வு செய்த பிறகு 1000+ லைவ் டிவி சேனல்கள் மற்றும் 10+ ஓடிடி ஆப்களை 4கே ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் பயன்படுத்தலாம். ஓடிடி சந்தாவில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (SonyLiv), ஜீ5 (ZEE5), சன்நெக்ஸ்ட் (Sun NXT) ஆகியவை அடங்குகின்றன. மேலும், ஹோய்சோய் (Hoichoi), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), டைம்ஸ்பிளே (TimesPlay), தாரங்பிளஸ் (TarangPlus) ஆகிய ஓடிடி தளங்களும் வழங்கப்படுகின்றன.

இதனுடன் ஈராஸ் நவ் (Eros Now), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஷீமாரூமீ (ShemarooMe), ஈடிவி வின் (ETV Win) போன்ற ஓடிடி ஆப்களையும் பயன்படுத்த முடியும். இவற்றை நேரடியாக டிவியில் பார்த்து ரசிக்கலாம்.
இதுதவிர, பிரீமியம் லைவ் டிவி சேனல்களும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி சேவைகளுடன் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையத்தை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

இந்த இணைய சேவையை வை-ஃபை ரூட்டர் மூலம் பெற முடியும். இந்த திட்டத்தில் 1000 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அந்த டேட்டா முடிந்த பின்னரும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா வசதி கிடைக்கும். இதற்கு கூடுதலாக 100 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த 100 ஜிபி டேட்டாவின் மதிப்பு ரூ.101 என குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் இந்த டேட்டாவை 90 நாட்களுக்குள் பயன்படுத்தி முடிக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Jio Rs 55 Plan With 30 Days Validity 1000 TV Channels 10MP Data Check Live TV Channels Only Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X