Home
News

கேபிள் TV அம்பேல்.. வெறும் ரூ.55-ல் 1000+ லைவ் டிவி சேனல்கள்.. 30 நாட்கள் வேலிடிட்டி.. 10 எம்பி டேட்டா!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விலையில் லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, கேபிள் டிவி மற்றும் டிடிஎச் இணைப்புகளுக்கு மாற்றாக குறைந்த செலவில் தொலைக்காட்சி சேனல்களைப் பார்க்க விரும்புபவர்களுக்கு ஜியோவின் சில திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கின்றன.

இதில் மொபைலில் மட்டும் லைவ் டிவி பார்க்கும் வசதியை வழங்கும் திட்டங்களும், நேரடியாக டிவியில் சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களை பயன்படுத்த உதவும் திட்டங்களும் உள்ளன. அந்த வகையில், ரூ.55 மற்றும் ரூ.2222 விலையில் கிடைக்கும் ஜியோ திட்டங்களின் முக்கிய விவரங்களை இப்போது பார்க்கலாம். இதற்கு ப்ரீபெய்ட் மற்றும் பிராட்பேண்ட் சேவை வைத்திருக்க் வேண்டும்.

கேபிள் TV அம்பேல்.. வெறும் ரூ.55-ல் 1000+ லைவ் டிவி சேனல்கள்!

ஜியோவின் ரூ.55 திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் லைவ் டிவி சேனல்களைப் பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஜியோஸ்டார் (JioStar), சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network), வார்னர் ப்ரோஸ். டிஸ்கவரி (Warner Bros. Discovery), ஈடிவி (ETV) உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் சேனல்களை அணுக முடியும்.

குறைந்த கட்டணத்தில் பல்வேறு மொழிகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க விரும்புபவர்களுக்கு இது ஒரு தேர்வாக இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ஜியோஸ்டார் சேவையின் கீழ் 1000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களைப் பார்க்கும் வசதி கிடைக்கிறது. இதில் ஸ்டார் பிளஸ் எச்டி (Star Plus HD), கலர்ஸ் எச்டி (Colors HD) போன்ற சேனல்களும் உள்ளன.

அதேபோல், சோனி என்டர்டெயின்மென்ட் சேவையின் கீழ் செட் எச்டி (SET HD), சோனி சாப் எச்டி (Sony SAB HD) உள்ளிட்ட சேனல்களையும் பார்க்கலாம். இருப்பினும், இந்த திட்டத்தில் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் இடம்பெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ் சேனல்களை விரும்புபவர்களுக்கும் இந்த திட்டத்தில் சில முக்கியமான தேர்வுகள் உள்ளன.

சன் டிவி நெட்வொர்க் மூலம் சன் டிவி எச்டி (Sun TV HD), கேடிவி எச்டி (KTV HD) உள்ளிட்ட சேனல்களை அணுகலாம். மேலும், வார்னர் ப்ரோஸ். டிஸ்கவரி நிறுவனத்தின் கீழ் டிஸ்கவரி சேனல் (Discovery Channel), அனிமல் பிளானட் (Animal Planet) சேனல்கள் உள்ளன. தெலுங்கு மொழி சேனல்களுககு ஈடிவி எச்டி (ETV HD), ஈடிவி தெலுங்கு (ETV Telugu) போன்ற சேனல்களும் கிடைக்கின்றன.

டேட்டா வசதியை பொறுத்தவரை, இந்த ரூ.55 திட்டத்தில் 10 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது. அந்த டேட்டா முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட பிறகு, 64 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தும் வசதி கிடைக்கும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் லைவ் டிவி சேனல்களைப் பார்ப்பதற்கான அணுகலை வழங்குவதுதான்.

இதனால், மொபைலில் லைவ் டிவி சேனல்களை பார்க்க விரும்புபவர்கள் இதைப் பயன்படுத்தலாம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் மட்டுமே என்பதால், அதன் பிறகு சேவையைத் தொடர மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதேபோல இதுவொரு டேட்டா திட்டமாக இருக்கிறது. ஆகவே, ஆக்டிவ் திட்டத்தை கஸ்டமர்கள் வைத்திருக்க வேண்டும்.

ஜியோ ரூ.2222 திட்டம், ஜியோஹோம் சேவையின் கீழ் வழங்கப்படும் மற்றொரு திட்டமாகும். இந்த திட்டத்தில் 3 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஒவ்வொரு மாதமும் தனித்தனியாக ரீசார்ஜ் செய்வதற்குப் பதிலாக, ஒரே முறையில் மூன்று மாதங்களுக்கான சேவையை பெற விரும்புபவர்களுக்கு இது பயன்படலாம்.

மேலும், லைவ் டிவி சேனல்களுடன் ஓடிடி ஆப்களையும் டிவியில் பயன்படுத்த விரும்புபவர்களை இந்த திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தைத் தேர்வு செய்வதன் மூலம் 1000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் மற்றும் 10-க்கும் அதிகமான ஓடிடி ஆப்களைப் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

இதற்காக 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் வசதி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் டிவியில் நேரடியாக லைவ் டிவி சேனல்களையும், ஓடிடி தளங்களில் கிடைக்கும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களையும் பார்த்து ரசிக்கலாம். ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), சன்நெக்ஸ்ட் (Sun NXT) உள்ளிட்ட ஓடிடி சேவைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர, ஹோய்சோய் (Hoichoi), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), டைம்ஸ்பிளே (TimesPlay), தாரங்பிளஸ் (TarangPlus) போன்ற ஓடிடி தளங்களையும் பயன்படுத்தலாம். மேலும், ஈராஸ் நவ் (Eros Now), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஷீமாரூமீ (ShemarooMe), ஈடிவி வின் (ETV Win) உள்ளிட்ட தளங்களும் இந்த திட்டத்தின் ஓடிடி சேவைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இதனால், டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி திரைப்படங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் வெப் சீரிஸ்களையும் ஒரே இணைப்பின் மூலம் அணுக முடியும். இணைய வசதியைப் பொறுத்தவரை, இந்த திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. வை-ஃபை ரூட்டர் மூலம் வீட்டில் உள்ள ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றில் டேட்டாவை பயன்படுத்தலாம்.

இந்த திட்டத்தில் 1000 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட டேட்டா அளவு முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைத் தொடர்ந்து பயன்படுத்தும் வசதியும் உள்ளது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக 100 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. வீட்டில் லைவ் டிவி சேனல்கள், ஓடிடி ஆப்கள் மற்றும் பிராட்பேண்ட் இணையம் ஆகியவற்றை ஒரே திட்டத்தின் கீழ் பயன்படுத்த விரும்புபவர்கள் ரூ.2222 திட்டத்தின் விவரங்களைச் சரிபார்த்துத் தேர்வு செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 55 Plan With 30 Days Validity, 1000+ Live TV Channels and 10MB Data Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X