Home
News

கேபிள் TV, DTH-ஐ முடித்த அம்பானி.. ரூ.55-க்கு 1000+ TV சேனல்கள்.. 30 நாட்கள் சந்தா.. கே டிவி.. Sun டிவி வருது!

கேபிள் டிவி, டிடிஎச் வைத்திருக்கும் நபர்களை மூக்கில் விரல் வைக்க செய்யும்படி முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனமானது, வெறும் ரூ.50 விலை கொண்ட திட்டத்தில் 1000+ லைவ் டிவி சேனல்களை கொடுக்கிறது. இதில் பிரீமியம் சேனல்கள் மட்டுமல்லாமல், சன் டிவி, கேடிவி போன்ற சன்நெட்வொர்க் சேனல்களும் கிடைக்கின்றன.

ஆனால், இந்த சேனல்களை ஜியோஸ்டார் (JioStar) மற்றும் ஜியோ டிவி (Jio TV) ஆகிய ஆப்களில் பார்த்து கொள்ளலாம். இது ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. ஏற்கனவே, ஆக்டிவில் இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஓடிடி திட்டமாக இதை ஆட் செய்து கொள்ளலாம். இதற்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

கேபிள் TV, DTH-ஐ முடித்த அம்பானி.. ரூ.55-க்கு 1000+ TV சேனல்கள்!

ஜியோ ரூ.55 திட்ட விவரங்கள் (Jio Rs 55 Plan Details): இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 10 எம்பி டேட்டா கிடைக்கும். ஜியோஸ்டார் (JioStar), சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network), வார்னர் ப்ரோஸ். டிஸ்கவரி (Warner Bros. Discovery) மற்றும் ஈடிவி (ETV) ஆகியவற்றின் பிரீமியம் சேனல்களும் இதில் அடங்கும்.

இதில் ஜியோஸ்டார் வழியாக 1000+ லைவ் டிவி சேனல்கள் கிடைக்கும். ஆகவே, ஸ்டார் பிளஸ் எச்டி (Star Plus HD), கலர்ஸ் எச்டி (Colors HD) உள்ளிட்ட சேனல்கள் கிடைக்கும். சோனி என்டர்டெயின்மென்ட் வழியாக செட் எச்டி (SET HD), சோனி சாப் எச்டி (Sony SAB HD) உள்ளிட்ட டிவி சேனல்களின் சந்தா கொடுக்கப்படும். ஸ்போர்ட்ஸ் சேனல்கள் கிடைக்காது.

சன் டிவி நெட்வொர்க் வழியாக சன் டிவி எச்டி (Sun TV HD), கேடிவி எச்டி (KTV HD) உள்ளிட்ட சேனல்கள் கிடைக்கும். வார்னர் ப்ரோஸ். டிஸ்கவரி வழியாக டிஸ்கவரி சேனல் (Discovery Channel), அனிமல் பிளானட் (Animal Planet) உள்ளிட்ட சேனல்கள் கிடைக்கும். ஈடிவி நெட்வொர்க் வழியாக ஈடிவி எச்டி (ETV HD), ஈடிவி தெலுங்கு (ETV Telugu) உள்ளிட்ட சேனல்கள் கிடைக்கும்.

இதில் 10 எம்பி டேட்டா கிடைக்கும். பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். லைவ் டிவி சேனல்களை மட்டுமே இந்த திட்டத்தில் பெற்று கொள்ள முடியும். 30 நாட்களுக்கு மட்டுமே இந்த டிவி சேனல்களின் அணுகல் கிடைக்கும். பிறகு மீண்டும் ரூ.55 செலுத்தி பெற்று கொள்ளலாம். இந்த விலைக்கு 1000+ டிவி சேனல்களை கொடுப்பதால், வரவேற்பு இருக்கிறது.

ஒருவேளை ஓடிடி ஆப்களின் சந்தா வேண்டுமானால், ஜியோ ரூ.175 திட்டத்தை பெற்று கொள்ளலாம். இது டேட்டா மற்றும் ஓடிடி சலுகையை கொடுக்கும் திட்டமாக இருக்கிறது. இதில் பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கும். ஆகவே, சோனிலிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+) மற்றும் சன்நெக்ஸ்ட் (Sun NXT) வருகிறது.

மேலும், கான்ச்சா லங்கா (Kanccha Lannka), பிளாட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) ஓடிடி ஆப்களை பெற்று கொள்ளலாம். கூடுதலாக ஜியோ டிவி கிடைக்கும். ஆனால், இதில் பிரீமியம் சேனல்கள் கிடைக்காது. இதில் 10 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Jio Rs 55 Plan With 1000 Live TV Channels Including Sun TV HD KTV HD Channels 30 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X